புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2019)

அமரிக்கையான வாழ்வு

சங்கீதம் 23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.


தெருக்களை கடந்து செல்லும் போது, மாளிகைகளாக காட்சியளிக்கும் வீடுகளின் வெளித் தோற்றத்தைக் கண்டு அதை இரசிப்பவர்கள் பலர். ஆனால் வீட்டிற்குள்ளே என்ன நடக்கின்றது என, தெருவிலே செல்லும் பாதசாரிகளுக்கு தெரியாது. வீடுகளின் தோற்றங்களினாலே அமரிக் கையான வாழ்வு உண்டாவதில்லை. அமரிக்கையான வாழ்வு தேவனால் உண்டாகும் ஈவு. குடிசைகளில் சமாதா னமாக வாழ்பவர்களும் உண்டு அதே போல இடாம்பீகரமான மாளிகையில் வாழும் ஏழைகளும் உண்டு. அதாவது பரலோகத்திலிருந்து வரும் பொக்கி~ த்தினால் தன் இருதயத்தை நிறைத்துக் கொள்பவனே அழியாத செல்வ ந்தனாக இருக்கின்றான். தேவ சமாதானம் எங்களை சுற்றியிருக்கும் காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக எங்களுள்ளே இரு க்கும் தேவ ஆவியானவரினாலே அனுக்கிரகம் செய்யப்படுகின்றது. இந்த இரகசியத்தை நன்கு அறிந்திருந்த தாவீது ராஜா, சமாதான த்தின் ஊற்றாகிய தேவனை எப்போதும் பற்றிக் கொண்டிருந்தார். கர் த்தர் என் மேய்ப்பராக இருப்பதினாலே நான் தாழ்ச்சியடைந்து போவ தில்லை. அதாவது அவருக்குண்டான பதவி அந்தஸ்து செல்வம் இவை களினாலே அல்ல, “நிறைவான கர்த்தர் என்னோடிருப்பதால்” என க்கு குறைவு ஏற்படுவதில்லை என்று உறுதியாக அறிக்கை செய் தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கர்த்தருடைய வழிநடத்துதலில் மனத்திருப்தியும் தேவ நீதியும் உண்டு. எந்த பொல்லாத சூழ்நிலை களும், அமரிக்கையான வாழ்க்கையை கெடுக்க முடியாது. எதிரிகளின் முன்னிலையில் வெற்றி உண்டு. ஆத்துமாவை தேற்றி, ஆவியினாலே அபிN~கிக்கின்றார். அவருடைய நன்மையும் கிருபையும் உண்டு. ஈற்றிலே அவருடைய பரலோக வீட்டிலே நித்திய நித்தியமான அமரிக் கையான வாழ்வு உண்டு. பிரியமானவர்களே, இன்று நீங்கள் தேச த்திலே ஒரு பிரபல்யமான பிரஜையாக இருந்தாலும், ஒருவரும் அறி யாத உலகத்தால் தாழ்த்தப்பட்ட பிரஜையாக இருந்தாலும், பெரும் உலக செல்வம் நிறைந்தவனாக இருந்தாலும், உலக அளவு கோலி ன்படி வறியவர்களாக இருந்தாலும், நித்திய நிறைவான வாழ்வை கொடுக்கும் கர்த்தரை பற்றிக் கொள்ளுங்கள். உலகம் காட்டும் வெளி த்தோற்றங்களினால் மயங்கிப்போகாமல், அமரிக்கையான வாழ்வை அருளும் கர்த்தரையே நம்பி வாழுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நிலையற்ற சிற்றின்பத்தை தரும் இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கி சமாதானத்தை இழந்து போகாமல் உம்மையே நம்பி வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-3