புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 14, 2019)

கிறிஸ்துவானவர் காட்டிய வழி

1 பேதுரு 2:21

ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட் டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொ டர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப்பின் வைத்துப்போனார்.


நடைமுறை வாழ்க்கையிலே தெய்வீக அன்பை எப்படி நாங்கள் காண் பிக்க முடியும்? முதல்படியாக நான் தெய்வீக அன்பில் வளரவே ண்டும் என்கின்ற சிந்தை உடையவனா(ளா)க மாற வேண்டும். நாளா ந்தம் எங்களைச் சூழ (வீட்டில், வேலையில், கல்வி நிலையங்களில், வெளியில், சபையில்) அநேக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவற்றுள் பலவற்றில் நாங்கள் நேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ளவர்களாக்கப்படுகின்றோம். சில உதாரணங்கள், “சபை ஐக்கிய த்திலே, நீங்கள் சம்மந்தப்படாத ஒரு குற்றத்தை ஒருவர் உங்கள் மேல் சுமத்திவிட்டார் அல்லது சபையிலே உங்களுக்கு பிரியமில்லாத காரியம் ஒன்று நடைபெறப் போகின்றது அல் லது நடை பெற்று விட்டது” இப்படிப் பட்ட சூழ்நிலைகளை மனித பெலத் தினால் எதிர்நோக்குவது மிகவும் கடினமானது. அதனால், மனிதர்கள் உடனடியாக தங்கள் அறிவின்படி வாக்குவாதங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொள்கி ன்றார்கள். இதனால் வன்மம், பகை, கசப்பு இருதயத்தில் குடி கொண் டுவிடுகின்றது. ஆனால், தேவ அன்பில் வளர வாஞ்சையுள்ளவர்கள், இந்த வேளைகளிலே மனதிலே தேவ ஆவியானவரின் உதவியை கேட்க வேண்டும். என் மாசம் இப்படி செய்யச் சொல்கின்றதே, ஆனால் தேவன் என்ன சொல்லுகின்றார் என்று சிந்திக்க வேண்டும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித் தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுப டும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன் பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீ ர்கள்;. கிறிஸ்துவும் தம் அன்பை காட்டும்படி எங்கள் பாடுகளை அவர் ஏற்றுக் கொண்டார். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்க ளைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகை க்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களு க்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று இயேசு கூறியிருக்கின்றார். இப்படியான சிந்தையைத் தரித்த வர்ளாக இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, பரலோகிலே நிலையாக நிலைத்திருக்கும் உம்முடைய நிறைவான தெய்வீக அன்பில் நான் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:44