புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 13, 2019)

தேவனை அறிந்தவர்கள் யார்?

1 யோவான் 4:8

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.


தாயின் கர்ப்பத்திலே எங்களை முன்குறித்து அழைத்த தேவனை நாங்கள் இன்னுமாய் அறிய வேண்டும் என்று பல முயற்சிகளை எடுக்கின்றோம். பரிசுத்த வேதாகமத்தை வாசித்து கற்றுக் கொள் ளுதல், வேதபாடங்களில் ஊக்கமாக கலந்து கொள்ளுதல், தேவ செய்திகளை கேட்டல், வேதம் சம்மந்தமான புத்தகங்களை வாசித்தல் போன்றவை அவற்றுள் சில. நீங்கள் இவைகளை செய்து வந்தால், தொடர்ந்தும் ஊக்கமாக இதை செய் யுங்கள். இவை யாவும் தேவனுடைய குணாதிசயங்களையும், அவரை நாடித் தேடி அவருடைய வார்த்தைக்கு கீழ்ப் படிந்த பரிசுத்தவான்களின் வாழ்வு எப்ப டியாக இருந்ததென்பதையும் எங்களு க்கு கற்று கொடுகின்றது. இவைகளை செய்து வருகின்ற நாங்கள், தேவனை அறிகின்ற அறிவில் வளர்ந்து வருகின்றோம் என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்? அதாவது, மற்றவர்களின் நிலையை அல்ல, அவரவர் தன் தன் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையின் மையப் பொருள் தெய்வீக அன்பு. “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன் பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கி றான். (1 யோவான் 4:7). தேவ அன்பு இல்லாதவன் தேவனை இன் னும் அறிய வேண்டிய பிரகாரமாய் அறியவில்லை. இந்த வசனங்களி னாலே சோர்ந்து போய்விடாதிருங்கள். எங்களுக்கு பெலன் தந்து உத வும்படிக்கு துணையாளராகிய தேவ ஆவியானவர் எங்களோடு இருக் கின்றார். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒரு வரில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். அப்பொழுது எங்களை காணுவோர் எங்கள் வழியாக தேவனை அறிந்து கொள்வார்கள். அவர் தம்முடைய ஆவியை நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்தி ருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திரு க்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலை த்திருக்கிறார். நாளுக்கு நாள் அவரை அறியும் இந்த அறிவில் வளர தேவன் கிருபை செய்வார்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, பரலோகிலே நிலையாக நிலை த்திருக்கும் உம்முடைய நிறைவான தெய்வீக அன்பில் நான் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவா 2:1-11