புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2019)

இயேசுவை நாடித் தேடுங்கள்

ரோமர் 12:2

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


இயேசுவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய ஐக்கியத்திலே இணைந்த நாளிலே, பாவத்திலிருந்து விடுதலை உண்டாயிற்று. மனதிலே பெரிதான மகிழ்ச்சி! பிசாசின் தந்திரங்களைக்குறித்த பயம் அகன்று போனது. தேவனை அறிகின்ற அறிவில் வளர வேண்டும், அவருடைய சித்தம் செய்ய வேண்டும் என்னும் வாஞ்சை இருந்தது. ஆனால், காலங்கள் கடந்து செல்லும் போது மனிதர்களுடைய வாழ்விலே இயேசுவை நாடித் தேடும் ஆர்வம் குறைந்து போய்விடுகின்றது. பின்பு, அவர்களை அறியாமல், அவர்களு டைய வாழ்க்கையிலே மேன்மைபா ராட்டுதல் ஆரம்பித்துவிடுகின்றது. பின்பு அவரவர் வாழ்வில் நடப்பிக்கப்படும், நற்கிரியைகளினாலே (உதவி செய்தல், அன்னதானம்; வழங் குதல் போன்றவைகள்) திருப்தி அடையும் நிலை உண்டாகிவிடுகின்றது. நற்கிரியைகள் நல்லது! தொடர்ந்து செய்யுங்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவை எப்போதும் நாடித் தேடுகின்றவர்களாக இருக்க வேண்டும். அதாவது, கிறிஸ்துவின் சாயல் அடையும்படிக்காய், எங்கள் உள்ளான மனிதனில் மாற்றம் ஏற்படத்தக்கதாய் ஒவ்வொரு நாளும் நாங்கள் அவரை அறிக்கின்ற அறிவில் வளரவேண்டும். சகேயு என்ற மனித னைப் பாருங்கள், அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாக இருந் ததால் அவனுக்கு இந்த உலக செல்வம் இருந்தது. சமுதாயத்தி னாலே பாவி என்று தள்ளப்பட்ட மனிதன்;. அவன் தோற்றத்தில் குள்ளனாக இருந்தான். இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இப்படியாக இயேசு எப்படிப்பட்டவர் என்று அறிய வாஞ்சையாக இருந்தான். இயேசு அவனுடைய வாழ்க்கையிலே வந்ததால், அவன் உள்ளத் திலே மாற்றங்கள் ஏற்பட்டது. இயேசு அவனுடைய வீட்டிற்கு சென் றது பெரிதான பாக்கியம். அவர் அவனுடைய வீட்டிற்கு சென்றதன் நோக்கம் என்ன? அந்த வீட்டை புனித ஸ்தலமாக்குவதற்கா? இல்லை! அவனுடைய வாழ்கை முறை மாறவேண்டும். மனதிலே தேவன் விரும் பும் மாற்றங்கள் உண்டாக வேண்டும். அந்த சகேயு இயேசுவை காண விரும்பியதைப் போல, நாங்களும் அவரை நாடித் தேட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்மை நாடித் தேடும் வாஞ்சையில் நான் அனுதினமும் பெருகவும், என் மனம் புதிதாகும் படிக்காய் என் மனதிலே நீர் விரும்பும் மாற்றங்கள் உண்டாகும்படி என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 19:1-10