புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2019)

தேவனிடம் சேருங்கள்.

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன் னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத் தினால் உன்னைத் தாங்குவேன்.


இன்று உங்களை மனமடிவடையச் செய்யும் பிரச்சனை என்ன? சற்று சிந்தியுங்கள்! மனம் சோர்ந்து போகாதிருங்கள். நன்மை செய்யும் தேவன் எங்களோடு இருக்கின்றார். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடு ப்பானா? பொல்லாதவர்களாகிய நீங் கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத் தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்று இயேசு கூறியிருக்கின்றார். எனவே, விசுவாசத்தோடு, உங்கள் வேண்டுதல் களை தேவனிடத்திலே தெரியப்படுத்து ங்கள். அற்பமானவனென்று ஒருவரை யும் அவர் தள்ளிவிடுவதில்லை. சில வேளைகளிலே உங்களை எதிர்நோக் கும் சூழ்நிலைகள் பயங்கரமானதாக இருக்கலாம். ஒரு வேளை நான் செய்த தவறினால் நான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். இதி லிருந்து யார் என்னை விடுதலையாக்கக் கூடும். என்ற சிந்தை தோன் றலாம் அல்லது இந்த எதிரியிடம் இருந்து யார் என்னை விடுதலை யாக்கக் கூடும் என்ற எண்ணம் உண்டாகலாம். பயப்படாதிருங்கள்! தம்முடைய ஏக சுதனாகிய இயேசுவையே எங்களுக்காக கொடுத்தவர் எங்களோடிருக்கின்றார். மனத் தாழ்மையோடு அவரிடம் சேருங்கள். அவர் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கின்றார். அவர் தம்முடைய வாக்கில் உண்மையுள்ளவர். “நான் உன்னைப் பலப்படு த்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத் தினால் உன்னைத் தாங்குவேன்” என்று தம்முடைய பிள்ளைகளுக்கு வாக் குரைத்தவர் எங்கள் நிலையை அறிந்தவராயிருக்கின்றார். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். எனவே திடநம்பிக்கையுடன் தேவனிடம் சேருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என்னை நோக்கும் சூழ்நி லை களை கண்டு, நான் பின்னிட்டு போகாமல், மனத் தாழ்மையுடன் உம்மிடம் கிட்டிச் சேரும்படி உம்மண்டை என்னை இழுத்துக் கொள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 91:3