புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2019)

யாரும் அறியாத அன்பு

1 யோவான் 4:9

தம்முடைய ஒரே பேறா ன குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவ ன் அவரை இவ்வுலகத் திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத் த அன்பு வெளிப்பட்டது.


ஒரு இளவரசனின் மெய் பாதுகாவலனுக்கு, தான் தேசத்தின் முடிக்குரி யவரை நான் பாதுகாக்கின்றேன் என்னும் மகிழ்ச்சி அவன் இருதயத் தில் இருக்கும். தன் உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்தாலும், இளவரசன் வாழ வேண்டும் என்பதற்காக அவன் தயங்காமல் தன்னை தியாகம் செய்வான். அந்த இளவரசன் இந்த மெய் பாதுகாவலனிலும் மேலானவன். ஒரு வேளை அந்த மெய்பாது காவலன் தன் உயிரை இளவரசனுக்காக தியாகம் செய்தால், அவன் உயிரோடிருக்கும் போது பெற்ற கனத்தைவிட, வீரமரணம் அடைந்த பின் பெரிதான கனத்தை அடைவான். ஆனால் தேசத்திலே இருக்கும் ஒரு ஏழைக் குடியானவனுக்காக ஒருவன் தன் உயிரைக் கொடுப்பானோ? இல் லை. அந்த ஏழை மரித்துப்போனாலும் அவன் கணக்கில் எடுக்கப்படுவதில் லை. ஆதாம் ஏவாள் வழியாக வந்த ஜென்ம பாவத்தினால், நாங்கள் யாவ ரும் கணக்கற்றவர்களாக இருந்தோம். எங்கள் முடிவு நித்திய மரணமாக இருந்தது. எங்கள் பாவ தோ~த்தை போக்க வழி ஏதும் இருக்கவில்லை. மீட்படைய வழி ஏதும் இல்லை! ஆ னால் தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. இவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. நானும் நீங்களும் வாழும்ப டிக்கு, அவர் தம்முடைய பரலோக மேன்மையை துறந்து, தாழ்மைக் கோலம் பூண்டார். என்ன ஆச்சரியமான அன்பு! நாங்கள் அவருடைய பரிசுத்த மணவாட்டி சபையாக மாறும்படிக்கு தம்மைப் பாவ நிவா ரண பலியாக ஒப்புக் கொடுத்தார். எங்கள் மேய்ப்பரானார், எங்கள் மூத்த சகோதரரானார், எங்கள் நண்பரானார். எங்கள் தலைவனானார். எங்கள் ஆத்தும நேசரானார், எங்கள் மணவாளரானார். எங்களுக்கு அவர் எல்லாமானார்! இப்படியாக யாரும் அறியாத அவருடைய நிறைவான பரலோக அன்பை எங்கள் மேல் ஊற்றினார்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நீர் எங்கள் மேல் காட்டுகின்ற தெய்வீக அன்பினை உணர்ந்து, அந்த நிறைவான அன்பை நான் மற்றவர்களுக்கு காட்டும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 1:15-20