புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 05, 2019)

அப்போஸ்தலனாகிய பவுல்

ரோமர் 8:36

கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்ப வன் யார்?


கர்த்தருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காக தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்த அப்போஸ்தலராகிய பவுல் (முன்பு சவுல் என அழைக்கப்பட்டவர்), யூத மதத்தின்படி பரிசேயர் என்ற குழுவைச் சேர்ந்தவர். இவர் யூத பிரமாணங்களை நன்றாக கற்றறிந்தவர். அந் நாளிலே இருந்த கௌரவமிக்க ரோம ராஜ்யத்தின் பிரஜையாக இரு ந்தார். மதத் தலைவர்கள் மத்தியிலே செல்வாக்கு உள்ளவராக இருந்த இவர், யூத மத பிரமாணங்களின்படி குற்றம் சாட்டப்படாதவர். இப்படியாக சகல விதத்திலும் செல்வாக்குள்ளவா ராக இருந்த இவர் கர்த்தராகிய கிறி ஸ்து இயேசுவை அறிகின்ற அறிவின் மேன்மைக்காக, இவைகள் யாவையும், ந~;டம் என்றும் குப்பை என்றும் தள்ளிவிட்டார். “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்ப வன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே.” என்று கர்த்தர் அவர்மேல் வைத்திருக்கும் அன் பையும், அவர் கர்த்தர் மேல் வைத்திருக்கும் அன்பையும் குறித்து திடமனதோடு அறிக்கையிட்டார். மேலும் அவர் கூறுகையில், மரண மானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானா லும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்க ளானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிரு~;டி யானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவ னுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக் கிறேன் என்றார். சற்று சிந்தித்துப் பாருங்கள்! எத்தகைய அன்பின் பிணைப்பு இது? கர்த்தர் இவர்மேல் கொண்ட அன்பும், இவர் கர்த்தர் மேல் வைத்திருக்கும் அன்பும், இந்த உலக பிரமாணங்களின்படியாக மனிதர்களுக்கிடையில் இருக்கும் எந்த உறவுக்கும் அப்பாற்பட்ட அன்பு. இது மேலான தெய்வீக அன்பு! இந்த தேகத்தைவிட்டுப் பிரி ந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; என வாஞ்சையாக இருந்தார். பிரியமானவர்களே, கிறிஸ்து எங்கள் மேல் கொண்டிருக்கும் அன்பை வேறு எந்த காரி யங்களும் பிரிக்க முடியாது. பவுலைப் போல நாங்கள் கிறிஸ்துவில் கொண்டுள்ள அன்பில் வளர்ந்து பெருகுவோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, அப்போஸ்தலனாகிய பவுல் என்ப வரைப் போல நானும் கிறிஸ்துவின் அன்பில் தினமும் வளரும்படிக்காக வாஞ்சையையும் கிருபையும் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 1:20-23