புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 01, 2019)

தாங்கி அரவணைக்கும் அன்பு

உன்னதப்பாட்டு 2:6

அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கி றது; அவர் வலதுகை என்னை அணைத்துக் கொள்ளுகிறது.


தேவன் எங்கள் மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படியாய் பல ஒப்பனையான சம்பவங்களையும் மற்றும் உவமைகளையும் நாங்கள் பரிசுத்த வேதாகமத்திலே காணலாம். தாய் தன் கர்ப்பத்தின் பிள் ளையை மறந்து போனாலும் நான் உன்னை மறந்து போவதில்லை. ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை தோளில் சுமப்பது போல எங்களை சுமக்கின்ற தகப்பன் அவர். இந்த ஒப்பனையான சம்பவங்களால் தேவனு டைய அன்பின் ஆழத்தை வர்ணிக்க முடியாது ஆனால் நாங்கள் அறிந்த வைகளை மையமாக வைத்து அவர் தம்முடைய அன்பின் ஆழத்தை எங்க ளுக்கு வெளிப்படுத்துகின்றார். இதற் கொத்ததாகவே, எப்படி ஒரு மணவாள னுக்கும் மணவாட்டிக்கும் தூய அன்பு இருக்கின்றதோ, அதே போல அவரு டைய அன்பும் எங்கள் மேல் இருக்கி ன்றது. மணவாட்டி மணவாளனுக்காக ஆவலோடு காத்திருக்கும் அந்த தன்னிகரில்லாத தூய அன்பி ற்கு ஒத்ததாக எங்கள் இருதயமும், எங்கள் கர்த்தரை வாஞ்சிக்க வேண் டும். மணவாட்டி சபையாகிய எங்கள் அன்பு, மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் பெருக வேண்டும். இந்த தனி ரக நேசத்தை உன்னதப்பாட்டு என்னும் புத்தகத்திலே மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஒப்பனையாக எழுதப்பட்டிருக்கின்றது. எப்படியாக இந்த உலகம் தன் மாம்ச கண்களால் மணவாட்டியைப் பார்த்து அவள் குறைவுள்ளவள் என்று கணித்தாலும், நேசராகிய இயேசு எங்கள் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, தம்முடைய வழிகளிலே நடக்கும் தம்முடைய ஜனங்களைப் பார்த்து என் மணவாட்டி சபையே நீ பூரண ரூபவதி, உன்னிலே பழுது ஒன்றும் இல்லை என்று கூறுகின்றார். அவருடைய கரத்தின் கிரியைகளாகிய எங்களை, அவருடைய அரவ ணைக்கும் கரங்கள் தாங்கி, தேற்றி, நடத்துகின்றது. அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும். இந்த அன்பு இந்த உலகத்தினால் உண்டானது அல்ல. இது தெய்வீக அன்பு! என்றும் மாறாததும், தணிந்து போகாததுமான அன்பு. இந்த தூய்மையான அவரவணைக்கும் அன்பைப் பற்றி இந்த நாட்களிலே தியானம் செய்யுங்கள். எங்களை தாங்கி அரவணைக்கும் கர்த்தரின் அன்பில்; ஆறுதல் அடையுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, உம்முடைய அணைக்கும் அன் புள்ள கரங்களுக்காக நன்றி! இந்த தெய்வீக அன்பிலே நான் வளரும்ப டிக்கு என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 84:2