புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 31, 2019)

முழு இருதயத்தோடு

1 சாமுவேல் 12:24

நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்;


வார இறுதி நாட்களிலே, சில சிறார்கள், காலை எழுந்ததும், வழக்க மாக அவர்கள பிடிவாதமாக இருக்கும் காரியங்கள் யாவையும், எந்த வித முறைப்பாடும் இல்லாமல் செய்து விடுவார்கள். கொடுக்கும் ஆகா ரத்தை உண்டுவிட்டு, அவசரவசரமாக தங்கள் பாடசாலை வேலைகள், மற்றும் பெற்றோர் கொடுத்த சிறு பொறுப்புகள் யாவையும் கூடிய சீக்கிரத்தில் செய்து முடித்து விடுவா ர்கள். இவைகளை விட அவர்கள் மன திற்கு பிரியமான பொழுது போக்குக ளில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் உள்ளத்தில் இருப்பதால், மற்றய காரியங்கள் யா வும் கடமையை தீர்ப்பது போல செய்து முடித்து விடுகின்றார்கள். இந்த பிரகா ரமாக வாழும் வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. ஆலயம் சென்று விட்டேன், வேதத்தை வாசித்து விட்டேன், ஜெபம் செய்து விட்டேன் என் பதுடன் முடிவடைவதில்லை. இவைகளை நாங்கள் செய்து வருவது நல்லது. அத்துடன் நின்றுவிடாது, நாங்கள் கற்றுக் கொண்ட வேத பிரமாணங்களின்படி எங்கள் முழு வாழ்க்கை யும் அமைய வேண்டும். வீட்டில், வேலையில், பாடசாலையில், ஆலயத்தில், வெளி இடங்க ளில் நாங்கள் எதை செய்தாலும் அவை தேவனுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். கடமைக்காக அல்ல, தேவனை அறிகின்ற அறி வின் மேன்மைக்காக யாவற்றையும் ந~;டம் என்றும் குப்பையென்றும் விட்டுவிட வேண்டும். எப்படியாக ஒரு மணவாட்டி கறைதிறை அற்ற வளாக, தான் நேசிக்கும் மணவாளனுடன் திருமண நாளை எதிர் பார் த்து காத்திருக்கின்றாளோ, அதற்கொப்பனையாக நாங்கள் எங்கள் நேசர் இயேசுவின் மேல் வைக்கும் நேசம் நாங்கள் விரும்பும் வேறு எந்த காரியங்களை விட முதன்மையாக எங்கள் இருதயத்தின் வாஞ்சையாக மாற வேண்டும். சிறார்கள் மட்டுமல்ல, பெரியவர்களும், தங்களுக்கு பர வசம் உண்டாக்கும் தங்கள் பொழு து போக்குகளை செய்வதற்காக, தேவ காரியங்களையும் பின்போடுகின்றார்கள். விலைமதிக்க முடியாத இரட்சிப்பை சமரசம் செய்கின் றார்கள். சாமுவேல் தீர்க்கதரிசி, தேச த்து ஜனங்களுக்கு கூறிய அறிவுரையின்படியே, நாங்கள் தேவ பய த்துடன், எங்கள் முழு இருதயத்தோடும் அவரை உண்மையாக சேவி க்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, களங்கமில்லாத உம்முடைய திவ்விய அன்பினால் எங்களை அழைத்த அழைப்பின் மேன்மையை உணர்ந்து, முழு இருதயத்துடன் உம்மை சேவிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 3:11