புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 30, 2019)

முன் குறித்த நேரம் வரை…

யோபு 23:14

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்


தேவன் முன்குறித்த நேரம் வரைக்கும் நாங்கள் அவருடைய வாக்கை நம்பி பொறுமையாக இருக்க வேண்டும். அவர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் மனுபுத்திரனுமல்ல. நாளாந்தம் எதி ர்நோக்கும் சவால்கள் கார்மேகம் போல எங்களை சூழ்ந்து கொள்ளும் போது, தேவன் மேல் கொண்ட நம்பிக்கையை நாங்கள் இழ ந்து, எங்கள் அறிவுக்கு எட்டியபடி பேச்சுகளை பேசாமலும், கிரியைகளை நடப்பிக்காமலும் தேவனுடைய வாக்கு த்தத்தத்தை அறிக்கையிட்டு, அவரு டைய கற்பனைகளின் வழியைவிட்டு அகன்றுபோகமல் இருக்க வேண்டும். யோபு என்னும் பக்தனுக்கு வந்த நெரு க்கங்களை நாங்கள் அறிந்திருக்கின்றோம். தனக்குண்டான யாவற்றை யும் இழந்து போனான். கடும் உபத்திரவத்தின் மத்தியிலும் அவன் தேவனில் கொண்ட நம்பிக்கையில் மனந் தளர்ந்து போகவில்லை. “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனை களை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த் தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல் லாம் செய்வார். எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்;” என்று யோபு அறிக்கையிட்டான். தேவன், அவனுக்கு முன்பிருந்த ஆசீர்வாதத்தைவிட இரட்டிப்பான ஆசீர்வாதத்தினால் அவனை ஆசீர் வதித்தார். பிரியமானவர்களே, எங்கள் வாழ்க்கையில் நெருக்கங்கள் அலையலையாய் வரும் போது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை எங்களுக்கு வேண்டிய உணவைப் பார்க்கிலும் அதிகமாக காத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தவறுகளின் மேல் இன்னும் அநேக தவறுகளை செய்து, அவைகளின் மத்தியில் உழன்று, எங்கள் வாயி னால் தேவனை தூ~pப்பதையே எதிராளியாகிய பிசாசானவன் விரு ம்புகின்றான். நாங்கள் அந்த நிலைக்கு தள்ளப்படாமல், இக்கட்டு நேரத்தில் தேவனுடைய வாக்கை இன்னும் அதிகமாக அறிக்கையிடு வதில் உறுதியாய் தரித்திருப்போம்.

ஜெபம்:

பரலோக தந்தையே, நீர் வைத்திருக்கும் பெரிதான ஆசீர்வாதங்களை இழந்து போகாமல், உம்முடைய வாக்கை நம்பி, காத்திருக்க எனக்கு பொறுமையைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 10:11