புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2019)

ஆற்றித் தேற்றும் நேசர்

சங்கீதம் 107:8

தவனமுள்ள ஆத்துமா வைக் கர்த்தர் திருப்தி யாக்கி, பசியுள்ள ஆத்து மாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,


மிகவும் வறட்சியான காலத்திலும், மழையிலும், புயலிலும் வளர்ந்தோ ங்கி கனி கொடுக்கும் மரங்களை நாங்கள் கண்டிருக்கின்றோம். அந்த மரங்கள் எந்த சூழ்நிலையிலும், தாங்கள் நற்கனி கொடுப்பதை நிறு த்தி விடுவதில்லை. அதே போல இந்த உலகத்திலே உபத்திரவங்கள் உண்டு. எங்கள் வாழ்க்கையிலும் சவா ல்கள் உண்டு. பல போராட்டங்கள் மத்தியிலே மனிதர்கள் வலுவிழந்து இளைப்படைந்து போய்விடுகின்றார் கள். சில வேளைகளிலே, வெளியே வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிரு ந்தாலும், மனதிலே சமாதானம் இல் லாமல் வாடுவோர் பலர். என்னிடத் தில் வாருங்கள் நான் இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு கூறியிருக்கி ன்றார். இயேசு கிறிஸ்துதாமே எங்கள் ஆத்துமாவை போஷித்து, திரு ப்தியாக்கி, ஆறுதல் அருள்கின்றார். ஆழமாக வேர்விட்டு வளர்ந்திருக் கும் விருட்சம் இந்த உலகின் காலநிலையில் தங்கியிருப்பதில்லை. வெளியே மழை பெய்தாலும், கடுமையான வெயிலாக இருந்தாலும், அந்த மரம் வாடிப் போவதில்லை. அதே போல இயேசு கிறிஸ்து விலே நிலைத்திருப்பவர்களின் வாழ்வும் இந்த உலகம் தரும் உயர் விலோ அல்லது தாழ்விலோ தங்கியிருப்பதில்லை. இந்த உலக செல் வங்கள் அவர்களை உயர்த்தி வைத்தாலும் அல்லது அவர்களை தாழ் த்தி வைத்தாலும், அவர்களுக்கு உள்ளே இருக்கும் சமாதானம் பெரு கிக் கொண்டிருக்கும். மனச் சோர்வுகள் அழுத்தும் போது இயேசுவை நோக்கிப் பாருங்கள். பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர் த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமி ல்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவ ருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவா ர்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர் களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடி த்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந் தாலும் சோர்ந்துபோகார்கள். அவர் தம்முடையவர்களை, ஆற்றித் தே ற்றி, போஷித்து, திருப்தியாக்கி, இளைப்பாறுதலை கொடுக்கின்றவர்.

ஜெபம்:

சகல ஆறுதலின் தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களைக் கண்டு, மனமடிந்து போகாமல், இயேசுவை நோக்கி பார்த்து ஆறுதல் அடையும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 84:1-12