புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 28, 2019)

நன்மை செய்யத் தாமதம் ஏன்?

நீதிமொழிகள் 3:27

நன்மைசெய்யும்படி உன க்குத் திராணியிருக்கும் போது, அதை செய்யத்த க்கவர்களுக்குச் செய்யா மல் இராதே.


ஒரு சகோதரனோ சகோதரியோ யாதொரு இடுக்கண்ணில் அகப்ப ட்டிருக்கும் போது, உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணங்களை தேடாமல், முதலாவதாக அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலை உண்டாக வேண்டும். எங்களுக்கு உதவி செய்ய க்கூடிய பெலன் (சூழ்நிலை) இருந்தால் நாங்கள் நிச்சயமாக உதவி செய்ய வேண்டும். உதவி செய்ய திராணியில்லாதவர்களாகவும் அல்லது அப்படி உதவி செய்வதற்கு நிர்வா கமோ சூழ்நிலையோ இல்லாதிருந் தால். தேவனுடைய பாதத்;தில் அமர்ந் திருந்து அவர்களுக்காக தேவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். ஒரு மனு~ன் எருசலேமிலிருந்து எரிகோவு க்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்தி ரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அந்த வழியிலே வந்த சமாரியன் அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண் ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவ னைப் பராமரித்தான். அந்த சமாரியன், காயப்பட்டவனை நியாயந் தீர் க்கவில்லை. ஆனால் இன்று பல மனிதர்கள் ஞானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று, கிறிஸ்து தங்கள் மேல் காட்டும் அன்பை மறந்து போய்விடுகின்றார்கள். யாராவது ஒரு மனு~ன், ஏதாவது நெருக்கத் தில் நெருக்கத்தில் அகப்பட்டால், அந்த மனுஷன் யார்? எந்த கோத் திரத்தான்? பாவியான மனிதனா? ஏன் தனியே போனான்? இவனை தேவன் தண்டித்திருக்கின்றாரோ? இவனுக்கு உதவி செய்தால் என்னை பற்றி ஜனங்கள் என்ன சொல்வார்கள்? இவன் உதவி பெற்ற பின்பு ஒழுங்காக வாழ்வானோ? என்று பல கேள்விகளை கேட்டுக் கொள்கி ன்றார்கள். அறிந்தோ அறியாமலோ மற்றவர்கள், பிரச்சனைகளிலே அகப்படலாம். அதேபோல நாங்களும் அகப்படுவதுண்டு. எனவே, நன்மை செய்யும் படிக்கான சந்தர்ப்பம் ஏற்படும் போது, தாமதிக் காமல் அதை செய்யுங்கள். உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தரு வேன் என்று சொல்லாதே.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, மற்றவர்களுடைய குறைவுகளை கண்டு அதை நியாயந்தீர்க்காமல், என்னால் முடிந்தளவு மனதார அவர்களுக்கு உதவி செய்யும்படியான இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 11:1-4