புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2019)

நல்ல ஊழியன்

யோவான் 15:12

நான் உங்களில் அன்பா யிருக்கிறதுபோல நீங்க ளும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.


தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவ னோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். இப்படி யாக தம்முடைய உன்னதமான அபிN~கத்தாலே தம்முடைய மாறாத அன்பை எங்கள் மேல் ஊற்றியிருக்கின்றார். இது எங்க ளுடைய குடு ம்ப அந்தஸ்த்தினாலோ, எங்கள் கிரி யைகளினாலோ உண்டாகவில்லை. நாங்கள் கிறிஸ்துவை அறியாமல் எப் படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் அதன் முடிவு அழிவு. ஆதலால் தேவ னுடைய அன்பை பெறுவதற்கு எங்க ளிடம் இருந்த தகுதி என்ன? எங்கள் பாவங்களை அவர் மன்னித்தார். புது வாழ்வு தந்திருக்கின்றார். உன்னத அபிஷேகத்தை தந்திருக்கின்றார். அப்பா பிதாவே என்று கூப்பிடும் தகுதியை தந்திருக்கின்றார். காரியம் இப்படியிருக்க அவருடைய பிள்ளைக ளாகிய எங்களுக்கு ஏன் மற்றவர்களை அன்பு செய்ய முடியாதிருக்கி ன்றது? ஏன் பிறரை அன்பு செய்ய தகுதியை தேடுகின்றோம்? ஏன் வீட் டில், வேலையில், பாடசாலையில், வெளி இடங்களில், ஆலயத்தில் மற்றவர்களை மன்னிக்க முடியாமல் இருக்கின்றது? சற்று எங்கள் நிலை யை இன்று ஆராய்ந்து பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் நல்ல ஸ்தானாதிபதிகளாகும்படி அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவருடைய குணதிசயங்களை வெளிப்படுத்தும் நடமாடும் நிரூபங்களாக இருக்க வேண்டும். ஒரு எஜமானன் தன் ஊழியனின் பெரிய கடனை அவ னுக்கு மன்னித்துவிட்டான். ஆனால் அந்த ஊழியன், தன்னிடம் சிறிய கடனை பெற்ற தன் ஊழியனின் கடனை மன்னிக்காமல், அவனை காவலில் போட்டான். அதாவது, இன்று நாங்கள் குற்றம் செய்யும் போது, இரகசியமாக தேவனுடைய சமுகத்திற்கு சென்று மன்னிப்பை கேட்கின்றோம். அவருடைய நியாத்தீர்ப்பை அல்ல, இரக்கத்தை கேட்டு பெற்றுக் கொள்கின்றோம். ஆனால் இன்னுமொருவர் செய்யும் சிறிய குற்றத்தை பகிரங்கமாக்கி, மேலிடத்தில் அறிவித்து, விசாரணையை நடப்பிக்கும்படி கேட்போமாக இருந்தால், நாங்களும் கடனை மன்னிக் காத ஊழியனைப் போல அநீதியுள்ளவர்களாக இருப்போம். நாம் அப்படியிராமல் கிறிஸ்துவின் சாயலில் வளர்ந்து பெருகுவோம்.

ஜெபம்:

என் எஜமானனாகிய தேவனே, அநீதியுள்ள ஊழியக்காரனைப் போல உம்மிடம் பெற்ற இரக்கத்தை மறுதலியாமல், மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:14-15