புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2019)

உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள்

யோவான் 14:3

நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.


இந்த உலகத்திலே வாழும் நாட்களிலே நாங்கள் பல கட்டங்களை கடந்து செல்கின்றோம். சிறுவர்களாக இருக்கும் நாட்களிலே பெற்றோ ருக்கு கீழ்ப்படிவுள்ள பிள்ளைகளாக இருக்கும்படியாகவும், திரும ணமாகிய பின்பு நல்ல கணவனாக அல்லது மனைவியாக இருக் கும்படிக்காகவும், பிள்ளைகளை பெற்ற பின்பு, பிள்ளைகளை தேவ வழியிலே நடத்தும் அன்புள்ள பெற் றோராக இருக்கும்படியாகவும் அழை க்கப்பட்டிருக்கின்றோம். இப்படியாக பாடசாலை, வேலைகள், ஊழியங்கள் என்று அழைப்பின் பட்டியல் ஒவ்வொ ருவருடைய வாழ்;க்கையிலும் வேறுப ட்டிருக்கலாம். இவை யாவற்றின் மத் தியிலும் தேவன் எங்களுக்கு கொடுத்த பிரதானமான பரலோக ராஜ்ய த்திலே அவரோடு நீடூழி வாழும்படியான அழைப்பை பெற்றிருக்கின் றோம். தம்முடைய சொந்த குமாரர் குமாரத்திகளாககும்படி புத்திரசு வீகாரத்தின் ஆவியை தந்திருக்கின்றார். இந்த பிரதானமான அழை ப்பை நாங்கள் விசுவாசித்து, ஏற்றுக் கொண்டு, மன உறுதியுடன் வாழும்படிக்கு அநேக வாக்குத்தத்தங்களை தந்திருக்கின்றார். அந்த வாக்குத்தத்தங்களில் பிரதானமான வாக்குத்தத்தமாக உங்கள் இரு தயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னி டத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாச ஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணி ன பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார். எனவே உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு வேளை தற்காலத்து நிலை வறுமையாக இருக்கலாம் அல்லது உலக செல் வத்தோடு இருக்கலாம். க~;டங்கள் நிறைந்த நாட்டிலே வாழலாம் அல் லது அபிவிருத்தி அடைந்த நாட்டிலே வாழலாம். பல இழப்புக் களை சந்திக்க நேரிடலாம், அநியாயங்களுக்கு இரையாகலாம், உயர் ந்திரு க்கலாம் அல்லது தாழ்ந்திருக்;கலாம். என்னதான் நடந்தாலும், தேவ னுக்காக காத்திருக்கின்றவர்களை அவர் வந்து மறுபடியும் தம்மோடு நித்தியமாய் வாழும்படி சேர்த்துக் கொள்ளுவார். எனவே வாழ்க்கை யில் என்னதான் நடந்தாலும் மன உறுதியுடன் இருங்கள்.

ஜெபம்:

சர்வவல்ல தேவனே, நீர் மறுபடியும் வந்து என்னை உம்மிடம் சேர்த்துக் கொள்ளும் நாள்வரை நான் உம்முடைய பெரிதான அழைப்பைக் காத்துக்கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 2:4-5