புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2019)

நான் மறக்கப்படுவதில்லை

ஏசாயா 49:13

கர்த்தர் தம்முடைய ஜன த்துக்கு ஆறுதல் செய் தார்; சிறுமைப்பட்டிருக் கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப் பார்.


நான் அநேக நாட்களாக ஜெபித்து வருகின்றேனே, தேவன் என்னு டைய வாழ்வின் காரியங்களை குறித்து கரிசனையற்றுப் போய்வி ட்டாரோ? தேவனுடைய பார்வையிலே நான் அற்பமானேனோ? அவர் என்னை மறந்தாரோ? கைவிட்டாரோ? என்று பலதரப்பட்ட சிந்த னைகள் மனிதர்கள் உள்ளத்திலே தோன்றுவதுண்டு. சில வேளை களிலே நாங்கள் நினைத்த காரியம், நாங்கள் முன்குறித்த நேரத்தில், எங் கள் எதிர்பார்ப்பிற்கு அமைய நடை பெறாதவிடத்து இப்படிப்பட்ட தோற் றங்கள் மனதில் எழுவதுண்டு. இப்ப டியாக தேவன் கைவிட்டாரோ என்னும் எண்ணம் அவராலே தெரிந்து கொண்ட ஜனங்கள் மத்தியிலே எழுந்த போது, தேவன் தீர்க்கதரிசி வழியாக இவ்வா றாக கூறினார். “சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.” ஆம் பிரியமானவர்களே, நாங்கள் தாயின் கருவில் உருவாகும் முன்னே எங்களை குறித்த சம்பூரண மான திட்டம் அவரிம் உண்டு. எங்கள் ஏக்கங்களை அறிந்த தேவன் எப்போதும் எங்கள் மேல் கரிசனையுள்ளவராக இருக்கின்றார். தேவன் எங்களுக்கென முன்குறித்தவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு பொறுமையாக இருக்க வேண்டும். நான் நினைத்த பிரகாரம் காரியங்கள் நடைபெறவில்லை என விரக்தியடைந்து, உலக போக்கிலே நாங்கள் செயற்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் இவ்வண்ணமாக பொறுமையை இழந்து, தாங்கள் நினைத்த வழிகளிலே தீர்மானங்களை எடுத்து, தங்கள் வாழ்க்கையில் இன்னும் அதிகமான நோவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். தம்முடைய குமாரனென்று பாராமல் அவரையே எங்களுக்காக ஒப்புக் கொடுத்தவர், மற்றய நன்மைகளை எங்களுக்கு மறைத்து வைக்க மாட்டார். அவர் ஆசீர்வதிக்கின்ற தேவன்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல. நீர் சொன்னவைகளை நிறைவேற்றி முடிப்பீர் என்று பூரண விசுவாசத்தோடு உம்மில் நிலைத்திருக்க அருள் புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலா 6:9