புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 18, 2019)

திட்டங்கள்

யாக்கோபு 4:15

ஆதலால்: ஆண்டவருக் குச் சித்தமானால், நாங்க ளும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய் வோம் என்று சொல்ல வேண்டும்.


திட்டமிட்டு வாழ்வதை தேவன் விரும்புகின்றார். தம்மை விசுவாசிக்கி ன்றவர்கள் தம்முடைய சம்பூரணமான சித்தத்திற்குள் வாழும்படி திட் டம் போடுவதற்கு அவர் தெய்வீக ஞானத்தை அளிக்கின்றவராயிரு க்கின்றார். நாங்கள் எந்த ஒரு காரியத்தையும் திட்டம் போடும் போது, தேவனை முதன்மையாகவும் மையமாகவும் வைத்திருக்க வேண்டும். நாங்கள் திட்டம் போடும் காரியங்;கள்: தொழில், கல்வி, உல்லாசப் பயணங் கள், மற்றும் வாழ்க்கைக்குரியவைக ளாக இருக்கலாம். அவை எவ்வளவு நன்மையானதாக எங்கள் கண்களுக்கு தோன்றினாலும், அவைகளை திட்டம் போடுவதற்கு முன்னதாகவே தேவனு டைய அனுக்கிரகத்திற்காக நாங்கள் ஜெபிக்க வேண்டும். தாவீது தேவ னுக்கு பிரியமுள்ள மனு~னாக இரு ந்த போதிலும், அவன் ஒரு காரிய த்தை செய்ய முன்பதாக, தேவனிடம் வேண்டிக் கொண்ட வேளை களிளெல்லாம் அவனுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், தேவனுடைய அனுசரணையில்லாமல் தன்னுடைய சொந்த அறிவின்படி காரிய ங்களை செய்த போது அவன் தோற்றுப் போனவனாக இருந்தான். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வை ப்படுத்துவார்.” என்று நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். தேவனுக்குச் சித்தமானால் நான் இதை செய்வேன் என்று மனப் பூர்வமாக கூறி அதன்படி வாழ்பவர்களே தேவ ஞானத்தை உடைய வர்களாக இருக்கின்றார்கள். எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்குரிய காரியங்களையும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் நாங்கள் புறக்கணித்துவிட்டு, மனித அறிவுக்கு எட்டியபடி திட்டங் களை போட்டுவிட்டு, அதை தேவன் அங்கீகரிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கக்கூடாது. எனவே நாங்கள் எதை செய்தாலும், எப்படி திட்டமிட்டாலும், ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்ல வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, என் சுயபுத்தியில் சார்ந்து, இந்த உலக போக்கின்படி திட்டங்களை நான் போடாதபடி, உம்முடைய சித்தத்தின்படி என் திட்டங்களை போட என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 3:5-6