புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 17, 2019)

பெருமை கொள்ளாதிருங்கள்

யாக்கோபு 4:12

நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒரு வரே, அவரே இரட்சிக்க வும் அழிக்கவும் வல்லவர்;


சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்;. சகோ தரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகி றவன் தன்னையே தான் நியாயாதிபதியாக உயர்த்திக் கொள்கின் றான். இப்படிப்பட்ட சுபாவத்தின் வழியாக மனிதர்கள் தங்களுக்கு ள்ளே பெருமையை வளர்த்துக் கொள்கின்றார்கள். அதாவது, மற்ற வனின் குற்றங்குறைகளை பேசுவதனால், எங்களை நாங்களே மேன் மையுள்ளவர்களாக எண்ணிக் கொள் கின்றோம். தேவன் தாமே நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய் யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக் குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டா மலும் இருக்கிறார். அவருடைய பிள் ளைகளாகும்படி அழைக்கப்பட்ட நாமும், பரம தந்தையின் தெய்வீக சுபாவங் களை தரித்தவர்களாக வாழ வேண் டும். கர்த்தருடைய இராப்போஜன பந்தியை ஆசரிக்கும் நாங்கள், கர்த் தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கின்றவர்களாக இருக்கின்றோம். எனவே, மற்றவர்களை அல்ல, எந்த மனு~னும் தன் னைத்தானே சோதித்தறிய வேண்டும். நாங்களும் இந்த உலகத்தோடு நியாயத்தீர்ப்பை அடையாதபடிக்கு, தேவனுடைய பிள்ளைகளாக வாழும் வழிமுறைகளை வேத வாக்கியங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது. எனவே, நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் உலகத்தோடு நியாயந்தீர்க்கப்படோம். தேவனைத் துதிக்கும் துதியும், அவருடைய சாயலாக சிரு~;டிக்கப்பட்ட மனு~னைக் குறித்த சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாகாது. தேவனுடைய அநாதி திட்டம் எங்கள் வாழ்வில் நிறைவேறுவதை நாங்கள் தடுத்து நிறுத் தாதபடிக்கு தேவன் முன்னிலையில் எங்களை தாழ்த்துகின்றவர்களாக இருக்க வேண்டும். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, தேவனுக்கு பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ் வளவு பெரிதாயிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தர் ஒருவரே நீதி யுள்ள நியாயாதிபதி. அவர் எங்கள் மேல் நீடிய பொறுமையுள்ள வராக இருக்கின்றார். இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். எனவே, மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் எங்க ளை நாங்கள் ஆராய்ந்து இன்னுமாய் தேவனை கிட்டிச் சேருவோம்.

ஜெபம்:

இரகமுள்ள தேவனே, சகோதரருக்கு விரோதமாய் பேசி, என்னையே நான் மேன்மையுள்ளவனாக எண்ணாதபடிக்கு, உம்மிடத்தில் என்னை தாழ்த்துகின்றேன். நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:3-5