புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2019)

கர்த்தருக்காக காத்திருங்கள்

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்த ருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய் க்கப்பண்ணுவார்.


தம்முடைய பிள்ளைகளுக்கென்று பிதாவாகிய தேவன் தாமே கொடு த்திருக்கும் அநேக வாக்குத்தத்தங்களை பரிசுத்த வேதாகமத்திலே காண்கின்றோம். அதாவது, ஒரு வீட்டிலே இருக்கும் சௌகரியங்கள் யாவும் அந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு உரித்தானது போல, தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவருடைய பிள்ளைகளாகிய எங்க ளுக்கு உரித்தானதாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தேவன் தாமே, பிரத்தியேகமாக ஒவ்வொருவருடனும்; இடைப்படுகின்றவராக இருக்கின்றார். அப்படியாக, ஒரு குறிப்பிட்ட காரிய த்தை உன் வாழ்க்கையிலே நான் நட ப்பிப்பேன் என்று தேவன் உங்களுக்கு கூறியிருந்தால், அவர் அதை நிறை வேற்றி முடிக்க உண்மையுள்ளவராக இருக்கின்றார். அந்த காரியத்தை தேவன் செய்து முடிக்கும் வரையும் நாங்கள் பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கூறும் போது, ‘தேவன் செய்து முடிப்பார் எனவே நான் என் பாட்டிற்கு நான் நினைத்த பிரகாரமாக இருப்பேன்’ என்பது பொருள் அல்ல. தேவன் முன்குறித்த காரியத்தை, எங்களில் முன்கூட்டியே நடத்தி வருகின்றார், அதன்பிரகாரமாகவே அவர் எங்களை அழைத்திரு க்கின்றார். இப்பொழுதும் அந்த காரியம் நிறைவேறும்படியாய் எங் களில் கிரியைகளை நடப்பித்து வருகின்றார். அந்த கிரியைகள் என்ன? நாங்கள் எங்கள் வழிகளை தேவனாகிய கர்த்தரிடத்திலே ஒப்புவிக்க வேண்டும். எங்கள் பேச்சு, எங்கள் செயல்கள், எங்கள் சிந்தனைகள் யாவும் அவருடையதாக மாற வேண்டும். குறிப்பாக எங்களில் இருக்கும் மாம்சத்தின் கிரியைகளை, பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு உணர்த்தும் போது, அவைகளை விட்டுவிட தீர்மானம் எடுக்க வேண்டும். கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம் என சங் கீத புத்தகத்;திலே வாசிக்கின்றோம். எனவே, எங்களுடைய சிந்தனை, சொல், செயல் யாவையும் கர்த்தருக்கு ஒப்புவித்து அவருடைய குறித்த நேரத்திலே, எங்களுக்காக முன்குறித்தவைகளை நிறைவேற்று ம்படி பொறுமையுடன் காத்திருப்போம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என்னுடைய சிந்தனை, சொல், செயல் யாவும் உம்முடைய வார்த்தையின்படி இருக்கத்தக்கதாகவும் உமக்கு பிரியமான வாழ்க்கை வாழவும் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:12