புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2019)

பக்திவிருத்திக்கு ஏதுவானவைகள்

யாக்கோபு 1:26

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ள வனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.


தேவனுடைய வார்த்தை எங்களில் நிலைகொள்ளாமல் போகும் ஒரு சில சந்தர்ப்பங்களை ஆராய்ந்து பார்த்து, அவைகள் எங்களிடம் இரு க்குமாயின் அவைகளை எங்களை விட்டு அகற்றிவிட வேண்டும். போர்க்களத்தில் நிற்கும் ஒரு யுத்தவீரன் தான் நிற்கும் இடம் இன்ன தென்பதையும், தான் யார் என்பதையும் மறந்து போவானானால் அவ னுடைய நிலை என்னவாகும்? நாங் கள் பக்திவிருத்தியடையும்படிக்காய், சபைகூடி வருகின்றோம். அங்கே ஒன் றாய் கூடி ஒருமனதுடன் தேவனை ஆராதிக்கவும், தேவ வார்த்தைகளில் நிலை கொள்ளும்படி தேவ செய் தியை கேட்கவும், ஒருவரை ஒருவர் தாங்கி, ஞான நன்மைகளை பகிர்ந்து கொள்ளும்படியாகவும் நாங்கள் ஆல யத்திற்கு செல்கின்றோம். நாங்கள் யாவரும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகர்களாய் நியமிக்கப்பட்டிரு க்கின்றோம். வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளோடு எங்களு க்கு போராட்டம் உண்டு. எங்கள் போராயுதங்கள் எங்கள் மாம்சத்தில் தோன்றும் தீய உணர்வுகள் அல்ல. நாங்கள் தீமையை தீமையால் ஜெயிக்கின்றவர்கள் அல்லர். நாங்கள் தீமையை தேவ நன்மையால் ஜெயிக்கின்றவர்கள். எனவே, நாங்கள் குறைவு களை கண்டு அவை களை குறித்து சம்பா~pத்து, அவைகளை மேன்மைப் படுத்தி, முறு முறுக்கும் வீரர்கள் அல்ல. நாங்கள் குறைகளை காணும்போது, விழிப்புள்ளவர்களாய் எங்கள் கர்த்தரை நோக்கி ஊக்கத்தோடு விண் ணப்பம்பண்ணி, குறைவுகளை கிறிஸ்து இயேசுவுக் குள் நிறைவாக்கு கின்றவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் தேவனைத் துதிக்கும் வெற்றி வீரர்கள். மனிதர்களுடைய ஆத்துமா பாதாளத்தில் அழிந்து போகாமல் காக்கும்படி தேவ நற்செய்தியை அறிவிக்கும் நாவை உடையவர்கள். தேவ துதியைச் சொல்லி, நித்திய வாழ்வை கொடு க்கும் தேவ நற்செய்தியை அறிவிக்கும் நாவாலே நாங்கள் நிறைவா னவைகளை, ஆசீர்வாதமானவைகளை, கிருபை நிறைந்த வார்த் தைகளையே பேச வேண்டும். எனவே எங்களை நாங்களே வஞ்சிக் காமல், பக்திவிருத்திக்கு ஏதுவான வார்த்தைகளைப் பேசுவோம். தேவன் தாமே பெலன் தந்து நம்மை நடத்துவாராக.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே> குறைவுகளை நீர் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் நிறைவாக்கி நடத்துவீர் என்ற விசுவாசம் என்னில் கிரியையை நடப்பிக்கும்படியாய் வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:3