புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2019)

என் சாயல் என்ன?

யாக்கோபு 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதப டிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத் திரமல்ல, அதின்படி செய் கிறவர்களாயும் இருங் கள்.


நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்; என்று இயேசு கூறியிருக்கின்றார். வார்த்தையில் நிலைத்திருப்பது என் பது, வேத வார்த்தைகளை கேட்டு கற்று கொள்வது மாத்திரமல்ல, கேட்ட வார்த்தைகளின்படி நாங்கள் எங்கள் நாளாந்த வாழ்க்கையை நடத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைக ளாக அழைப்பை பெற்ற நாங்கள், சந் தர்ப்ப சூழ்நிலைகளிலே நாங்கள் யார் என்பதை மறந்து போய்விடுகின்றோம். எங்கள் சுயரூபத்தை நாங்கள் கண் ணாடியில் பார்க்கின்றோம். அதுபோல எங்கள் உள்ளான மனிதனுடைய ஆவி க்குரிய நிலையை பார்க்கும் கண்ணா டியாக வேத வார்த்தைகள் இருக்கி ன்றது. அந்த ஜீவனுள்ள வார்த்தைகள் நாங்கள் யார் என்பதையும், எங்கள் அழைப்பையும், நாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தையும், அதற்காக நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் எங்களுக்கு உணர்த்தி வெளிப்படுத்துகின்றது. நாங்கள் அந்த ஜீவனுள்ள வார்த்தைகளை கேட்டுவிட்டு, அதன்படி வாழாமல் இருப்போம் என்றால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இழுப்புண்டுபோய் விடுவோம். இந்த உலக போக்கு களின்படி வாழ்பவர்களாக மாறிவிடுவோம். இந்த உலக போக்குகள் நாங்கள் விட்டுவந்த பழைய வாழ்க்கையின் பாவ சுபாவங்கள். அந்த போக்குகளின்படி நாங்கள் வாழும் போது, எங்கள் ஆவிக்குரிய நிலையை நாங்கள் மறந்து போய்விடுகின்றோம். அங்கே எங்கள் மாம்சத்தின் சுய இச்சைகளை வெளிப்படுத்தும் பழைய மனு~ னையே காண்கின்றோம். கேட்டவைகளை மறந்து போகின்றவன், திரு வசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவன், வார்த்தையின் வெளி ச்சத்தில் தன்னைத் தானே பார்த்து, அவ்விடம் விட்டுப் போனவுடனே, தன்னுடைய தேவ சாயலின் அழைப்பு இன்னதென்பதை மறந்துவிடு கின்றான். அதனாலே தன்னையே தான் வஞ்சித்து விடுகின்றான். நாங் கள் அப்படி இருக்கலாகாது. வேத வார்த்தையின் வெளிச்சத்தில் வாழு ம்படியாக எங்களை அர்ப்பணிக்கும் போது நாங்கள் யார் என்பதை ஒரு போதும் மறந்து போக மாட்டோம்.

ஜெபம்:

ஜீவனுள்ள பரலோக தந்தையே, நாங்கள் யார் என்பதை உணர்ந்து, உம்முடைய ஜீவ வார்த்தையின் வெளிச்சத்திலே வாழும்படி க்காய் எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:6-8