புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2019)

இடறிப்போவதில்லை

2 பேதுரு1:10

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலை யும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இட றி விழுவதில்லை.


சரீரத்தின் ஒரு அவயவமானவது அதன் தொழிற்பாட்டை இழந்து போகும் போது அல்லது அது உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறை வேற்றாதவிடத்து, அங்கே நிறைவு காணப்படமாட்டாது. தனிப்பட அந்த அவயவத்திலும், அந்த அவயவம் இணைக்கப்பட்ட சரீரத்தின் இயக்கத்திலும் குறைவு காணப்படும். நாங்கள் ஒவ்வொருவரும் சபை யாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாக இருக்கின்றோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட ஒரு சிறப்பை கர்த்தர் கொடுத்திருக்கி ன்றார். நாங்கள் நியமிக்கப்பட்ட அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், வேறு எந்த கிரியையை நடப்பித்தாலும், எங்கள் வாழ்க்கையில் நிறைவு காண ப்படமாட்டாது. நாங்கள் ஒவ்வொரு வரும், ஒரு சபையிலும், ஒரு குடும்ப த்திலும் இணைக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு கல்வி நிலையத்தில் அல்லது ஒரு வேலை ஸ்தலத்தில்; இணைக்கப்பட்டிருக்கின் றோம். நாங்கள் தனிப்பட எங்கள் தொழிற்பாட்டை இழந்து போகும்போது நாங்கள் இணைக்கப்பட்டிருக்கும் எல்லா கூட்டுறவிலும் குறைவு காணப்படும். ஒரு குடும்பத்திலே ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பொறு ப்பை அல்லது அந்த அங்கத்தவர் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாதவிடத்து, குடும்பத்திலே சமாதானம் குறைய ஆரம்பிக்கும், அப்படியாகவே அந்த குறைவு நாங்கள் செல்லும் சபை ஐக்கியத்தி லும், எங்கள் வேலை இடத்திலும்; பிரதிபலிக்கும். உப்பானது சாரமே ற்றப்பட்டிருப்பது போல, எங்கள் அழைப்பை நிறைவேற்றும்படி தேவ பெலனை பெற்றிருக்கின்றோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தேவ பெலனின் நோக்கத்தை மறந்து, நாங்கள் வேறு எந்த கிரியைகளை நடப்பித்தாலும் தேவன் அனுக்கிரகம் செய்திருக்கும் மெய் சமாதானத்தை நாங்கள் அனுபவிக்க முடியாது. சரீரத்தின் அவ யவங்கள் ஒவ்வொன்றிற்கும்; சரியாக பொருந்தும் ஸ்தானங்கள் உண்டு. அதே போல நாங்கள் நிற்க வேண்டிய இடமும் செய்ய வேண்டிய காரியமும் உண்டு. அதை செய்யும் போது நாங்கள் நிறை வான சமாதானத்தை அடைந்து கொள்வோம்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, என்ன நோக்கத்திற்காக என்னை அழைத்தீரோ அந்த நோக்கத்தை நான் நிறைவேற்றும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 4:19