புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2019)

சஞ்சலத்தை அகற்றிவிடு

பிரசங்கி 11:10

நீ உன் இருதயத்திலிரு ந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.


மற்றய வாலிபர்கள் எல்லாம் எப்படியாக உல்லாசமாக வாழ்;கின்றா ர்கள். நான் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் இரட்சிப்படைந்தி ருந்தால், இன்னென்ன காரியங்களை அனுபவித்திருப்பேன் என்று ஒரு வாலிபன் தன் உள்ளத்திலே சொல்லிக் கொண்டான். இப்படியான எண்ணங்கள் வாலிபர்களிடம் மாத்திரமல்ல, சில வேளைகளிலே, யாவருடைய மனதிலும் தோன்றலாம். இப்படிப்பட்ட சிந்தனைகள் தேவனை அறிகின்ற அறிவுக்கு விரோதமானவைகள். நாங்கள் சுய இச்சைகளில் சிக்குண்டு போனால், அந்த இச்சையானது குறித்த சந்தர்ப் பத்திலே எங்களை பாவம் செய்ய தூண்டும், பின்பு நாங்கள் அந்த பாவ த்திற்கு அடிமைகளாக மாறிவிடுவோம். எனவே இப்படிப்பட்ட எண்ணங்கள் எங்களில் தோன்றும் போது, அவை களை எங்கள் இருதயத்திலே தக்க வைத்து, அவைகளை குறித்த சிந்த னைகளை வளர்க்காமல், உடனடியாகவே எங்கள் இருதயத்திலிருந்து இவ்வகையான எண்ணங்களையும், எங்கள் மாம்சத்திலிருந்து தீங்கை யும் நீக்கிப்போட வேண்டும். நாங்கள் அழிந்து போகின்ற இந்த கூடா ரமாகிய சரீரத்திலே வாழ்ந்து வந்தாலும், அழிவுக்குரியவைகளை நாடித் தேடுகின்றவர்கள் அல்ல. நாங்கள் அழியாமையை தரித்துக் கொள்ளும்படிக்கு, அழிவில்லாத தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நித் தியமானவைகளை நாடித் தேடுகின்றோம். அழிவில்லாத தேவனுடைய வார்த்தைகள் வழியாக, அழிவுக்குரிய பாவ இச்சைகளை எதிர்த்து போராடுகின்றோம். எங்கள் போராயுதங்கள் இந்த உலக போக்கிற்கு ரியதல்ல. எங்கள் போராயுதங்கள், அந்தகார கிரியைகளை அழித்துப் போடுகின்ற, தேவனுடைய பெலனாக இருக்கின்றது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத் தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிரு க்கிறோம். இந்த உலகம் தரும் இன்பங்கள் தற்காலிகமும்; மாயையு மானது. அவைகளினால் எங்கள் இருதயத்தை சஞ்சலப்படுத்தாமல், தெய்வீக சுபாவங்களை நாடித் தேடுவோம்.

ஜெபம்:

கிருபையுள்ள தேவனே, இந்த உலகத்தின் ஆசைகள் தங்கும் இடமாக என் இருதயத்தை வைத்திருக்காமல், பரலோகத்தின் ஆசைகளி னால் நிறையும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:14-15