புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2019)

இரட்சிப்பின் மேன்மை

மத்தேயு 22:14

அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.


பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜா வுக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு ஒரு உவமையைக் கூறினார். அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிரு ந்தார்கள். அதாவது அழைக்கப்பட்டவர்களோ அந்த பெரிதான அழை ப்பை அசட்டை பண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபார த்துக்கும் போய்விட்டார்கள். மற்றவர் கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார் கள். சற்று இந்த சம்பவத்தை சிந்தித்து பாருங்கள்! ஒரு தேசத்தின் ராஜா வின் ஆதரவினால் எங்களுக்கு கிடை க்கக்கூடிய நன்மைகள் பெரிதானவை கள். எங்களுடைய பிரச்சனைகள் எங்களிடம் இருக்கும் வயலும் வியாபாரமும் என்றால், அந்த பிர ச்சனைகளை தீர்த்துவைக்கவும், நாங்கள் நினைப்பதிலும் அதிக திமாக செய்வதற்கும் ராஜாவிற்கு அதிகாரம் உண்டு. இந்த சம்பவத் திலே தேவனானவர், தம்முடைய ஜனங்கள் என்று தெரிந்தெடுத்த இஸ்ரவேலரை, பரலோக ராஜ்யத்திற்கு வரும்படி அழைப்பைக் கொடு த்தார். இந்த அழைப்பு மேன்மையானது, அழியாதது, மாசற்றது. ஆனால் அவர்களோ, உணர்வில்லாதவர்களைப் போல செயற்பட்டா ர்கள். முடிவு என்ன? அவர்களின் அழிவு! பின்பு, இயேசுகிறிஸ்து வைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பான வர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயி ருந்த எங்களை அழைத்தார். இயேசுவின் விலைமதிக்க முடியாத இர த்தத்தினால், எங்கள் பாவங்களை கழுவி, எங்கள் அவமானத்தை நீக்கி, இரட்சித்து, இரட்சிப்பின் வஸ்திரத்தை தந்தார். இந்த விலை மதிக்க முடியாத இரட்சிப்பைக் குறித்து நாங்கள் அசட்டையாக இரு ந்து, மேன்மையான அந்தத் தகுதியை நாங்களும் இழந்து போவோ மாக இருந்தால், நாங்களும் பரிதவிக்கப்படத்தக்கவர்களாக மாறிவிடு வோம். எனவே, இந்தப் பூவுலகின் செல்வங்களுக்காகவோ, அழிந்து போகின்ற காரியத்திற்காகவோ தேவன் தந்த இந்த மகத்தான இரட் சிப்பை இழந்து போகாமல் காத்துக் கொள்வோம்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, நீர் எனக்கு தந்த இரட்சிப்பின் மேன்மையை நான் நன்கு உணர்ந்தவனாய், அதை காத்துக் கொள்ளத்தக்கதாக உம் முடைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்ற கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:12