புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2019)

பிரயாசப்படுகின்றவர்கள்

எபிரெயர் 13:3

கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்ட ப்பட்டவர்கள்போல அவ ர்களை நினைத்துக்கொ ள்ளுங்கள்; நீங்களும் சரீ ரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுப விக்கிறவர்களை நினை த்துக்கொள்ளுங்கள்.


ஆதிச் திருச்சபையின் நாட்களிலே, கிறிஸ்துவின் சுவிசே~த்தின் நிமி த்தம் அநேகர் காவலிலே (சிறையிலே) வைக்கப்பட்டார்கள். அவர்க ளைக் குறித்து கரிசனையுள்ளவர்களாக இருக்கும்படியாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இன்றைய நாட்களில், பல நாடுகளிலே சுவிசே~த்திற்கு திறந்த வாசல் உண்டு. குறிப்பிட்ட சில நாடுகளிலே, இன்றும் கிறிஸ்துவின் சுவிசே~த்திற் காக, பலர் பாடுகளையும், கட்டுக்க ளையும் அனுபவித்து வருகின்றார்கள். சிறைச்சாலையில் போடப்படாவிடினும், அதற்கொத்த பிரகாரமாய் பல மட்டங் களில் இன்று வெவ்வேறு ஐக்கியத் திலுள்ள தேவ ஊழியர்களும், விசுவா சிகளும் நெருக்கப்பட்டு வருகின்றார் கள். அவர்களோடு நாங்கள் யாவரும் கிறிஸ்துவில் ஒரே சரீரமாக இருக்கின் றோம். எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநே கமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயி ருக்கிறது. ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோ~ப்படும். “சீ~ன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன்” என்று இயேசு கூறியிருக்கின்றார். எங்களுக்கு இந்த பூவுல கிலே இலாபம் உண்டாகும்படி அல்ல, பரலோகத்திலே இருக்கின்ற எங்கள் பிதாவின் சித்தம் இந்த பூமியிலே நிறைவேறும்படியாய் நாங் களும் பங்காளிகளாக அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, உதவி செய்ய சந்தர்ப்பம் ஏற்படும் போது, நான் இன்ன குழுவைச் சேர்ந்த வன், நீ அந்த குழுவை சேர்ந்தவன் என்று பாகுபாடில்லாமல், உங் கள் அன்பை கூட்டி வழங்குங்கள். அவர்களை உற்சாகப்படுத்து ங்கள். உங்களால் இயன்ற அளவிற்கு பொருள் உதவியை வழங்குங் கள். சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய திருப்பணியின் நிமித்தம் பிரயாசப்பட்டு, பாடனுபவிக்கின்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும்படி க்கான உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மாற்கு 9:41