புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 04, 2019)

மறந்து விட பழகிக் கொள்ளுங்கள்

லேவி 19:17

உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக;


யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலகமுண்டாக்குகிறதினால் அநே கர் தீட்டுப்படாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. “மன்னித்துவிட்டேன் ஆனால் அவன் செய்த துரோகத்தை மறக்க மாட்டேன்” என சில மனிதர்கள் கூறு வதுண்டு. அது தங்கள் வாழ்க்கையின் கொள்கை என்று அதை நியாயப்ப டுத்திக் கொள்வார்கள். இது மன்னிப்பு அல்லவே. தன்னுடைய தகப்பனுக்கு துரோகம் செய்து தன் ஆஸ்தியின் பங்கை எடுத்துச் சென்ற இளை ய மகன், தன் தகப்பனுக்கு அவமானத்தை உண்டு பண்ணினான். பின்பு பாவ வழிகளிலே தன் ஆஸ்தியை எல்லாம் செலவழித்து, மிகவும் தாழ்ச்சியடைந்த நிலையிலே தகப்பன் வீட்டிற்கு திரும்பினான். ஒரு வேளை தகப்பன் தன்னை அவருடைய ஊழியர்களில் ஒருவ னாக ஏற்றுக் கொள்வார் என்று நினைத்திருந்தான். ஆனால், அவன் வீடு திரும்பிய போது, தகப்பன் ஓடிச் சென்று அவனை கட்டிய ணைத்து, பெரும் விருந்தை உண்டு பண்ணினார். அவன் செய்த பாவங்களை நோக்கிப் பார்க்கவில்லை. அதைப் பற்றி ஏதும் பேசவும் இல்லை. அதே போல நாங்களும்; மன்னிக்கும் போது, அந்த விடயம் இனி எங்கள் இருதயத்தில் எண்ணப்படுவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். பழைய கசப்பின் நினைவுகள் வரும் போது, இயே சுவின் நாமத்தில் அதை கடிந்து கொண்டு. அந்த நபரை ஆசீர்வதிக்க வேண்டும். இப்படியாக நாங்கள் செய்து வரும் போது, எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை குறித்த கசப்பான எண்ணம் பெலனற்றுப் போய்விடும். பெரிதான மகிழ்ச்சி உள்ளத்திலே பொங் கும். பாத்திரத்தையே உருக்கிப்போடும் இரசாயன திரவம் போல, எங் கள் இருதயத்தில் குடி கொள்ளும் சிறிய கசப்பு, எங்கள் சமாதான த்தை குலைத்துவிடுவதால், எங்கள் ஆத்துமாவை கெடுத்து விடும். சரீரத்திலே வியாதிகளையும் உண்டாக்கும். எனவே, மன்னித்துவிட்டேன் ஆனால் மறக்க மாட்டேன் என்ற கசப்பு நிறைந்த எண்ணத்தை விட்டு விட்டு, தேவன் எங்களுக்குத் தயவாய் தந்த மன்னிப்பை மற்றவர்களு க்கு தாராளமாய் வழங்குவோம்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நீர் என் பாவங்களை மன்னித்து, அவைகளை நினையாதிருப்பது போல நானும் மற்றவர்களை உண்மை மனதுடன் மன்னிக்க எனக்கு கற்றுத் தருவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:14-15