புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2019)

கோபத்தை விட்டுவிடுங்கள்

எபேசியர் 4:26

சூரியன் அஸ்தமிக்கிறத ற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது


தகுந்த காரணத்தினால் உண்டான கோபமாக இருந்தாலும் அல்லது காரணமில்லாமல்; ஏற்படும் கோபமாக இருந்தாலும், கோபம் இருதய த்திலே குடி கொள்ள இடங் கொடுக்கக் கூடாது. கோபத்தை விட்டு விடாமல் பற்றிக் கொள்ளும் போது, பிசாசுக்கு இடங்கொடு க்கின்ற வர்களாக இருப்போம். அப்படி செய்யும் போது எங்கள் பேச்சுக்களி னாலும், செயல்களினாலும், சிந்தனை களினாலும் பல பாவங்களை செய்து விடுவோம். கோபத்தை எப்படி விட்டு விடுவது? எந்த பாவ சுபாவங்களையும் எமது சொந்த பெலத்தால் மேற்கொ ள்ள முடியாது. எங்கள் போராயுதங் கள் அரண்களை தகர்தெறியும்படி தேவன் தரும் பெலனாக இருக்கின்றது. இந்த பெலனானது இயேசு வின் நாமத்திலே, தூய ஆவியானவர் வழியாக எங்களுக்கு கொடுக்க ப்படுகின்றது. ஆகவே, நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க ஆர ம்பிக்க வேண்டும். பொதுவாக, தேவனை அறிந்த மனிதர்களும் தங்கள் மாம்சகிரியைகளிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதற்குரிய முதல் காரணியாக பெருமை இருக்கின்றது. பெருமை எங்களில் குடி கொண்டிருக்கும் போது, நாங்கள் எங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள் ளவும் மாட்டோம். எங்களை தாழ்த்த இடங் கொடுக்கவும் மாட்டோம். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார். எனவே, எங் கள் குற்றங்களை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்க ஆரம்பிக்க வேண் டும். அதே நேரத்தில் மற்றவர்களை மன்னிக்க ஆரம்பிக்க வேண்டும். மன்னிப்பு இல்லாத இடத்தில், கோபம் ஆற்றப்பட மாட்டாது. கசப் பான வேர் இருதயத்தை முற்றாக கெடுத்துவிடும். எனவே, தேவனு டைய பாதத்திலே அமர்ந்திருந்து, தேவ வார்த்தையை அறிக்கையி ட்டு, உங்களை துன்பப்படுத்துகின்றவர்களை மன்னித்து ஆசீர்வதிக்க வேண்டும். எனவே, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஜெபம் அவசியம். ஆகவே, கோபத்தை வெற்றி கொள்ள முதலாவதாக மன் னிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொரு தடவையும் நாங்கள் தவறும் போது, தேவன் எங்கள் மேல் கோபம் கொண்டு எங்கள் மேல் நீதி செய்தால், ஒருவரும் பரலோகம் செல்ல முடியாது. தேவனுடைய பிள் ளைகளாகிய நாங்கள் அவரைப்போல மற்றவர்களை மன்னிக்க ஆர ம்பிக்கும் போது, நாளடைவில், கோபமானது எங்களில் செயலற்றுப் போய்விடும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, பழிக்கு பழி வேண்டுவேன் என்று வாழாமல், உம்மிடமிருக்கும் மன்னிக்கும் மனப்பான்மை என்னில் பெருகும்படிக்காய் எனக்கு கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 7:9