புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 02, 2019)

கோபத்தின் விளைவுகள் என்ன?

யாக்கோபு 1:20

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.


மனிதர்கள் நன்மை எது, தீமை எது என்பதின் முடிவுகளை தங்கள், தங்கள் சொந்த அறிவின்படி எடுத்துக் கொள்கின்றார்கள். மனு ~னுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதன் முடிவோ மரணம் என்று நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். தேவன் ஒருவரே நன்மை எது தீமை எது என்பதை அறிந்தவர். அவ ருடைய வார்த்தைகளை கைக்கொள்வ தினால் நாங்கள் அந்த ஞானத்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்று பல காரணங்களுக்காக மனிதர்கள் கோபம் கொள்கின்றார்கள். பின்பு அந்த கோபம் நியாயமானது என பல காரணங்களை காட்டி நிரூபிக்க முயல்கின்றார்கள். நான் இப்படியாக பிறந்தேன், நான் இப்படியான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டேன், மற்றவர்கள் இப்படியான பேச்சு க்களை பேசுவதாலும், இவ்விதமான செய்கைகளை செய்வதாலும் நான் கோபமடைகின்றேன் என்று கூறிக் கொள்வார்கள். காரணங்கள் பல நூறு இருந்தாலும் மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். சாந் தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. கோபத்தோடு சேர்ந்து, கசப்பும், மூர்க்கமும், முறுமுறுப்பும், மன அழு த்தங்களும் மனிதனுடைய இருதயத்திலே குடிகொள்ளும். எனவே, கோபத்தை அப்படியே எங்கள் வாழ்வில் விட்டுவிடக்கூடாது. எங்கள் கோபத்திற்கு காரணம் மற்றவர்கள் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, வேத வாக்கியங்களின்படி பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. எத்தனையோ ஆண்டுகள் கடந்து வந்த தீய பழக்கங்களாயிருந்தும், மனிதர்கள் அதைவிட்டு விட தீர்மானம் செய்து, தேவனை நோக்கி பார்த்த போது, அவர் அவர்களைக் விடுவித்;தார். முதலாவதாக, சாட்டுப்போக்கு சொல் வதை நிறுத்தி விடுங்கள். நான் விடுதலையடைய வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருவசனத்தை மனதார கேட்க ஆரம்பியுங்கள், எனக்கு எல்லாம் தெரியும் என உடனடியாக மறுஉத்த ரவு கொடாமல், மறுஉத்தரவு கொடுப்பதற்கு பொறுமையாயிருங்கள். தேவனுடைய பாதத்திலே அமர்ந்திருந்து ஜெபியுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, என் பெலவீனங்களை நியாயப்ப டுத்த, சாட்டுப் போக்குகளை தேடாமல், அவைகளை ஜெயங்கொள்ளும் படிக்காய் எனக்கு ஞானத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:8-11