புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2019)

தேவனுடைய கட்டளைகள்

யோவான் 14:15

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.


தேவனுடைய கட்டளைகள் யாவும் அன்பினாலே நிறைவேற்றப்பட வேண்டும். கடமையுணர்வு நல்லது, ஆனால் அப்படியாக நாங்கள் கடமைக்காக தேவ கட்டளைகளை நிறைவேற்றும் போது, முழுமனம் அங்கே இருக்காது. எடுத்துக் காட்டாக, “நான் இன்று கட்டாயமாக அந்த விழாவிற்கு போக வேண்டும், எனக்கு கடமை உண்டு” என்று தங்கள் நற்பெயரைக் காக்க மனிதர் கள் கிரியைகளை நடப்பிப்பதுண்டு. ஆனால் தேவனுடைய கட்டளைகளை நாங்கள் அப்படி நிறைவேற்றுவதில் பயனில்லை. முதலாவதாக கட்டளை களை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற வேண்டும். மற்றவர்களுடைய வாழ்வை சரிப்படுத்தும்படி, அவர்களை நாங்கள் நியாயந்தீர்ப்போமென்றால், தேவனு டைய அன்பு இன்னும் எங்களது இருதயங்களை ஆளுகை செய்ய வில்லை என்பதே பொருள். எப்படியென்றால், விபசாரம் செய்யாதிரு ப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பா யாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என் கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே முழுமையாய் அடங்கியிருக்கிறது. ஆகவே, பிற னிடத்தில் அன்பு கூரும் நாங்கள், முதலாவதாக, எங்கள் வாழ்வில் நாங்கள், பிறனுக்கு எதிராக, விபசாரம், களவு, பொய், மற்றும் இச் சைகளை ஒழித்துவிட வேண்டும். தேவ அன்பு ஒரு மனிதனில் நிலை கொண்டிருந்தால், அவன் தேவனுடைய கற்பனைகள் யாவையும் வாஞ்சையுடன் நிறைவேற்றுவான். தேவனிடத்தில் அன்புகூருகிறே னென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கி றவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? இன்று பல மனிதர்களின் கண்கள், கட்டளைகளை நிறைவேற்றும்படி, மற்ற வன் மேல் நோக்கமாக இருக்கின்றது. அதாவது, அவன் இப்படி செய்து விட்டான், ஆகவே, அவன் இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று அதிக கரிசனையோடு இருக்கின்றார்கள். நாங்கள் அப்படியிருக்கலாகாது. தேவனை அன்பு கூரும் நாம், முழுமனதோடு அவருடைய கட்டளைகளை எங்கள் வாழ்வில் நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே, உம்முடைய கட்டளைகளை, முழுமனதோடு, என் வாழ்விலே நிறைவேற்றும்படிக்காய் என்னை வழிநடத்திச் செல்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 13-9:10