புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 29, 2019)

ஆசீர்வாதத்தின் வார்த்தைகள்

ரோமர் 12:14

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி சபியாதிருங்கள்


ஆதியிலே முதல் மனிதனாகிய ஆதாம் தேவனுடைய கட்டளையை மீறி, பிசாசின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால், அவன் நிமித்தம் பூமி சபிக் கப்பட்டாயிற்று. அதனால் மனிதர்கள் வாழ்நாளெல்லாம் வருத்தத் தோடு அதன் பலனை புசிக்கின்றார்கள். இந்த சாபத்திலிருந்து மனித குலத்தை மீட்கும்படியாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார். இருளின் அதிகாரத்திலிருந்து தம்முடைய உன்னதமான ஒளியினிடத் திற்கு எங்களை அழைத்திருக்கின்றார். ஏனெனில், எற்கனவே சபிக்கப்பட்டிரு க்கும் இந்த உலகத்தை சபிக்கும்படி க்காய் அல்ல, சாபத்திலிருக்கும் மனி தர்கள் இயேசுவின் பேரொளியை காணும்படிக்காய் எங்களை வேறு பிரி த்திருக்கின்றார். நாவினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கி றோம்;. தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரையும் அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிரு ந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற் றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எனவே எங்கள் வாயிலிரு ந்து சாபத்தின் வார்த்தைகளை பேசாதபடிக்கு எங்கள் வாயின் வார் த்தைகளை குறித்து கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். சில வேளைகளிலே, கீழ்ப்படியாத தங்கள் சொந்த பிள்ளைகளின் கிரி யைகளினாலே, அறிந்தோ அறியாமலோ பெற்றோர்கள் கூட சாபமான வார்த்தைகளை பேசிவிடுகின்றார்கள். “நீ துன்பப்படப் போகின்றாய்” “நீ உருப்படமாட்டாய்” என்று கூறிவிடுவார்கள். கீழ்ப்படியாத பிள்ளை கள் கஷ்டங்களை எதிர்நோக்கப் போகின்றார்கள் என்பது உண்மை. எனவே நாங்கள் கோபங் கொண்டு, மேலும் அவர்களை சபிக்காமல், அவர்களின் மனமாற்றத்திற்காக தேவனை தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். பிசாசின் அடிமைத்தனக் கட்டுக்களில் அகப்பட்டு, மனக் கண்கள் குருடுபட்டிருக்கும் மனிதர்கள் விடுதலையடையும்படி யாய், தேவனுடைய வார்த்தைகளை அறிக்கை யிட்டு, பிசாசின் அந்தகார கிரியைகளை ஜெயம் கொள்ளும்படி ஜெபம் செய்யுங்கள். பிள்ளைகளை கண்டித்து தண்டிக்க வேண்டிய வேளைகள் உண்டு ஆனால் அவர்களை சபிக்காமல் ஆசீர்வதியுங்கள்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, நான் கோபமடைந்து மற்றவர்களை சபிக்காதபடிக்கு, என் வாயின் வார்த்தைகளை காத்துக் கொள்ளும்படிக்கு என்னை உணர்த்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 3:8-11