புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 27, 2019)

கர்த்தர் கற்பித்தபடி செய்வோம்

யோவான் 13:34

நான் உங்களில் அன்பா யிருந்ததுபோல நீங்க ளும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்


நீ எனக்கு இப்படி துரோகம் செய்தாய் அல்லவா? நான் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், உனக்கு நன்மை செய்தேன் அல்லவா? என்று ஒரு எஜமானன் தன் வேலைக்காரனிடம் அவ்வப்போது கூறிக் கொள்வான். இப்படியாக பல ஆண்டுகள் சென்ற பின்பு, அந்த வேலைக்காரன், “ஐயா! நான் தவறு செய்தது மெய், நீங்கள் இரங்கி யதும் மெய். அந்த நாளிலிருந்து நான் உங்களுக்கு வேறு ஏதாவது குற் றத்தை செய்தேனா? அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்து விட் டதே, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அந்த பழைய சம்பவத்தை புதுப்பிக் கின்றீர்கள் என்று மனவருத்தத்துடன் கூறினான். ஆம் பிரிய மானவர்களே, மனிதர்களாகிய நாங்கள், மற்றவர்கள் எங்களுக்குச் செய்த குற்றத்தை இலகுவில் மறந்து போவதில்லை. அதே வேளையிலே, மற்றவர்களுக்கு நாங்கள் செய்த நன்மைகளை பேசுவதற்கும் பின் நிற்பதில்லை. இயேசுவை நேசித்த அவருடைய ஊழியராகிய பேதுரு என்பவர், ஒரு நாள் இயேசுவை தனக்கு தெரி யாது என்று, ஒரு தடவை அல்ல, மூன்று தடவைகள் மறுதலித்தார் சில ஆண்டுகளாக கர்த்தரோடு, இருந்து, அவரிடம் பல நன்மைகளை பெற்றவன். அவரோடு உணவுண்டவன். கர்த்தருடைய மறுரூபக் காட் சியை கண்டவன். அப்படி இருந்தும் தன் எஜமானனை மறுதலித்தான். எந்த எஜமானன் இதனை ஏற்றுக் கொள்வான்? ஆனால், கர்த்தர் மரணத்தை வென்று உயிர்தெழுந்த பின்பு, தம்முடையவர்களைத் தேடி வந்தார். பேதுருவை திபேரியா கடலோரமாக சந்தித்தார். நீ ஏன் எனக்கு இப்படிச் செய்தாய் என்று அவர் கடிந்து கொள்ளவில்லை. தம்முடைய ஊழியனை சாத்தான் சோதிப்பான் என்று அறிந்த போது, தன் ஊழியன் விசுவாசத்தில் தளர்ந்து போகாமல் இருக்கும்படி வேண்டுதல் செய்தார். பேதுருவை மறுபடியும் கண்ட போது, நீ என்னை நேசிக்கின்றாயா என்று கேட்டார். பிரியமானவர்களே, எங்கள் கர்த்தர் கற்பித்தபடி, செய்து காட்டியபடி, ஒருவன் குற்றத்தில் அக ப்பட இருந்தாலும், அவன் தெரிந்தோ தெரியாமலோ அகப்பட்டுவிட்டா லும், அவனுக்காக நாங்கள் ஜெபிக்க வேண்டும். கர்த்தர் கூறியது போல அன்பாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என்னை நேசிக்கின்ற நல்ல தேவனே, நீர் கூறிய அருள்வாக்கின்படி, இதயபூர்வமாக நாங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாக இருக்கத்தக்கதாக உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-9