புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 26, 2019)

கர்த்தர் வெளிப்படும் நாள்

மத்தேயு 25:31

அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.


இந்த உலகிலே மனிதர்கள் மனிதர்களுக்கெதிராக வழக்கு தொடரு கின்ற போது, நீதி மன்றத்தினால், அவர்களுடைய வழக்கை விசார ணை செய்வதற்கு திகதியையும் நேரத்தையும் முன்குறிக்கின்றார்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென சட்டத்தரணிகளையும் சாட் சிகளையும் தெரிந்து கொள்கின்றார்கள். எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என்பதை குறித்து ஆய த்தப்படுத்துவார்கள். வழக்கின் நாளிலே, ஒவ்வொரு கட்சியினரும் தங்கள், தங் கள் ஆதங்கத்தை கூறிக்கொள்வார் கள். ஒரு கட்சியினர் சொல்வதை எதி ர்த்து, மற்ற கட்சியினர் தங்கள் நிலை யை நியாயப்படுத்த முயற்சிப்பார் கள். சில வேளைகளிலே, வழக்கு விசா ரணைகள் பல் நாட்கள், கிழமைகள், மாதங்கள், அல்லது ஆண்டுகளுக்கும் நீடிக்கலாம். கிடைக்கப்பெற்ற தகவல் களின் அடிப்படையில் சட்டபூர்வமாக நீதியரசர் தம்; தீர்ப்பை வழங்குவார். இவை இந்த உலகத்தின் ஒழுங்கு முறைகள். இதனால் பலர் நன் மையடைகின்றார்கள். மனிதர்கள் யாவரும் ஒரு நாள் நீதியுள்ள நியா யதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் நிற்பார்கள். அங்கே கட்சிகளுக்கும், எதிர்பேச்சுக்களுக்கும் நியாயப்படுத்துதலுக்கும் இடமிருக்காது. அவருக்கு எந்த சாட்சிகளும் தேவையில்லை. அவர் யாவற்றையும் அறிந்தவர். அவர் அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனை அளிப்பார். பல நாடுகளிலே, நீதிமன்றங்கள் கூட கால அவ காசம் கொடுக்கின்றார்கள். மேலும், தங்கள் வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு தாக்குதல் செய்யும் வாய்ப்புக்களையும் கொடுக்கின் றார்கள். ஏனெனில், மனிதர்கள் யாவரும் உண்மையை பேசுபவர்கள் அல்ல என்பதனால், அவரசப்பட்டு கண்போன போக்கின்படி தீர்ப்பு களை வழங்காமல், சகலவற்றையும் பொறுமையோடு, தங்களால் இய ன்றமட்டும் அலசி ஆராய்கின்றார்கள். அதற்கு இன்னும் அதிகமாக, எங்கள் தேவானாகிய கர்த்தர், மனிதர்கள் மேல் நீடியபொறுமையுள்ள வராக இருந்து, தம்முடைய கிருபையை அதிகதிகமாக பொழிகி ன்றார். எனவே நாங்களும் காலத்திற்கு முன் அவசரப்படாமல் கர்த்த ருடைய வேளைக்காக பொறுமையோடு காத்திருப்போம்.

ஜெபம்:

பராக்கிரமுள்ள தேவனே, நீர் மகிமையிலே வெளிப்படும் நாளிலே, நீதியாய் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பீர். காலத்துக்கு முன் எதையும் நியாயந்தீர்க்காமல் பொறுமையாக இருக்க என்னை வழிநட த்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 4:5