புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 25, 2019)

ஏற்றுக் கொள்ளும் இயேசு

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சு மக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


எங்களுடைய ராஜாங்கத்திலே நாங்கள் யாவரையும் ‘அவர்கள் இருக் கின்றபடி’ ஏற்றுக் கொள்வோம். இந்த உலகம் யாவருக்குமுரியதும். யாவரும் அதன் குடிமக்கள் என்றும் பல முற்போக்குவாதிகள்; கூறு வதை கேட்டிருக்கின்றோம். அப்படியாக முற்போக்குவாதிகளின் ஆளு கையிலே, மனிதர்களை இருக்கின்ற வண்ணமாக ஏற்றுக் கொண்டு, அதாவது, அவர்கள் தேவனுக்கு எதி ராக பாவங்களை செய்ய விருப்பமு ள்ளவர்களாக இருந்தால், அது அவர்க ளுடைய உரிமை என்று கூறி, அவர் கள் செய்யும் பாவத்தை அங்கீக ரிக் கும்படி சட்டங்களை அமுல்படுத்தி, அவர்கள் தங்கள் மாம்சம் விரும்பும் ஆசை இச்சைகளை நிறைவேற்றி, பாவ வாழ்க்கையில் அழிந்து போகும்படி வகை செய்து கொடுக்கின்றார்கள். யாவரையும் இருக்கின்ற வண்ணமாக ஏற்று, நித்திய மரணத்திற்கு அழைத் துச் செல்வதே பிசாசானவனின் திட்டம். இந்த அழிவின் திட்டத்திற்கு “நாங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வோம்” என்று ஒரு வசீகர மான தலையங்கத்தை போட்டுக் கொள்கின்றார்கள். ஆனால், மனித குலத்தின் மீட்பர் இயேசு ஒருவரே, ஒருவரும் கெட்டு அழிந்து போகா தடிக்கு “எல்லோரையும் இருக்கின்ற வண்ணமாக ஏற்றுக் கொள் கின்றார்”. வந்தவர்களை அவர்களுடைய பாவ கிரியைகளின்படி தண் டிக்காமல், அவர்கள் மேல் தம் கிருபையை பொழிகின்றார். தம்மிட த்தில் வருகின்றவர்களின்; பாவங்களை கழுவி, அவர்களை சுத்திகரி த்து, இனி பாவம் செய்யாமல் பரிசுத்த வாழ்க்கை வாழும்படிக்கு, கற் றுத் தந்து, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கும் வழி நடத்தி செல்கின்றார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பா றுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளு ங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்க ளுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்ற இயேசு யாவரையும் அழைக்கின்றார்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, இந்த உலகத்தின் போலியான அழைப்பில் அழிந்து போகாமல்,உம்மை கிட்டிச் சேரந்து, நீர் தருகின்ற இளைப்பாறுதலை கண்டடைய என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16