புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 21, 2019)

விண்ணப்பத்தை கேட்கின்றவர்

யாக்கோபு 1:5

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்


நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக் குச் செவிகொடுக்கிறாறென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. மனிதர்களுடைய வாழ்க்கையிலே, பாவத்தைக் குறித்த குற்ற உணர்வு ஏற்படும் போது அந்த தைரியம் அசைக்கப்படுகின்றது. தேவன் என் வேண்டுதலை கேட் பாரோ? என்று கேள்வி மனிதர்களின் மனதில் தோன்றுகின்றதால் அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் சந்தேகமாக மாறிவிடுகின்றது. அவர்களுக்குள்ளே இரண்டு மனம் உருவாகிவிடுகின்றது. தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என் றும் அவர் சகலத்தையும் செய்து முடி க்க வல்லவர் என்ற அறிவும் அவர்க ளிடம் இருக்கின்ற போதிலும், என் ஜெபத்தைக் கேட்பாரா என்ற எண் ணம் வேர்விட ஆரம்பிக்கின்றது. உங் களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள் ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூ ரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவ ரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப் பொழுது அவனுக்குக் கொடுக்கப்ப டும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாச த்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனு ~ன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினை யாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலை யற்றவனாயிருக்கிறான். எனவே எங்கள் சுத்த மனசாட்சியிலே குற்ற உணர்வு ஏற்படும் போது, அந்த குற்ற உணர்வு, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் தேவனுடைய கற்பனைகளுக்கு எதிரான பாவங்களி னால் உண்டானதாக இருந்தால், அதை அறிக்கை பண்ணி விட்டு விட வேண்டும். சகோதரருக்கு எதிரான துரோகம் என்றால், சம்மந்த ப்பட்ட வர்களுடன் ஒப்புரவாக வேண்டும். எங்கள் பெலவீன நேரங்க ளில் தேவ ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்ய வல்லவராயிரு க்கின்றார். அவர் எங்களோடிருந்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, பாவங்களை மூடி மறைத்து, குற்ற உணர்வோடு வாழ் நாட்களை வீணாக்காமல், அவற்றை அறிக்கை பண்ணி, விட்டுவிட்டு, தைரியத்தோடு உம்மண்டை சேர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:14-21