புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2019)

போதுமானவர்!

1 தீமோத்தேயு 6:6

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.


நீ எப்படியாவது, கணிதபாடத்தின் இறுதிப் பரீட்சையில், அயலில் வசிக்கும் உன் வகுப்பு மாணவனைவிட அதிக புள்ளிகளை எடுக்க வேண்டும். அப்படி நீ எடுக்காவிட்டால், எங்கள் குடும்பத்திற்கு அவ மானம் என்று ஒரு மனிதன் தன் மகனிடம் கூறினான். அதாவது, தன்னுடைய மகன் சிறப்பாக படித்து பாடசாலையில் அதி விசேட சித்தி பெற வேண்டும் என்பதல்ல, எப் படியாவது, அயலிலுள்ள மாணவனை விட அதிகமான புள்ளிகளை எடுக்க வேண்டும் என்பதே அந்த தந்தையா ரின் ஏக்கம். இது நெறிமுறையான போட்டி அல்ல, இது குடும்ப பெரு மையை குறித்தது. இது பொறாமை நிறைந்த நோக்கம். இன்று உலகிலே சில மனிதர்கள் போட்டி மனப்பான்மையுடன் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றார்கள். அதாவது எங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன? எங்கள் வாழ்க்கையின் தேவை என்ன என்பதை பற்றியதல்ல, மாறாக, நாங்கள் எங்கள் அயலவர்களைவிட அல்லது உறவினர்களைவிட எவ்வளவேனும் தரம் குறைந்தவர்கள் அல்ல என்று காட்டும்படிக்கு, இன்று மனிதர்கள், வீடுகளையும், பொருட்களையும் கொள்வனவு செய்ய கடுமையாக வேலை செய்கின்றார்கள். இதுவும் ஒரு கானல் நீரை போன்றது இத னால் அப்படிச் செய்பவர்கள் ஒரு நாளும் திருப்தியடைவதில்லை. ஆசையானது அலைந்துதோடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம் என பிரசங்கி கூறியிருக்கின்றார். நாங்கள் மற்றவர்களோடு எங்கள் வாழ்க்கைத் தரத்தை ஒப்பிட்டு அதன்படி வாழ்வோமாக இருந்தால், எங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் இடங் கொடுக்கின்றவர்களாக இருப்போம். முன்னேற வேண்டும் என்ற பிரயாசம் நல்லது, ஆனால் எங்கள் நோக்கம் சரியாக இருக்க வேண்டும். தேவனே, நீர் மற்றவனை ஆசீர்வதித்திருக்கின்றீர் ஆகவே, என்னையும் ஆசீர்வதியும் என்று கேட்பது தேவன் முன்னிலையில் சரியாகாது. ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் எங்கள் நித்திய ஜீவனுக்கு ரிய பிரதானமாக அழைப்பை மறந்து போய்விடக் கூடாது. எங்கள் தேவை என்னவென்று எங்களை அழைத்த தேவன் அறிந்திருக்கின் றார்;. எனவே அவர் எங்கள் வாழ்க்கையில் போதுமானவர் என்ற மன நிலையோடு வாழ்வோம்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, போட்டி மனப்பான்மையோடு என் வாழ்க்கையை வாழாமல், நீர் அழைத்த நோக்கத்தை என் வாழ்வில் நிறைவேற்றும்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 6:7-9