புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2019)

தீமையை விட்டு விலகுங்கள்

1 தெச 5:22

பொல்லாங்காய்த் தோன் றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


பெருந்தெருவைக் கடக்கும்படி, பாதசாரியாருக்குரிய சமிஞ்ஞை விள க்கு வரும்வரை காத்திருந்த ஒருவர். அந்த சமிக்ஞை வந்தபின்பும், ஒரு சாரதி வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு வந்ததை கண்ட போது, சற்று தரித்திருந்து, அந்த வாகனம் சென்ற பின்பு, பெரு ந்தெருவை பாதுகாப்பாக கடந்து கொண்டார். இப்படியான சூழ்நிலை யிலே, சில மனிதர்கள், நாட்டுச் சட்ட ங்களையும், தங்களது உரிமையையும் குறித்து விவாதிப்பார்கள். இது பாத சாரிகள் தெருவைக் கடக்கும் நேரம், எனக்கு உரிமை உண்டு, தவறுபவர்க ளுக்கு எதிராக நான் வழக்கு தொடு ப்பேன் என்று துணிவுடன் பெருந்தெ ருவை கடக்கத் துணிவார்கள். உரிமையும் நாட்டு சட்டமும் உங்கள் சார்பில் இருந்தாலும், நீஙகள் உயிரோடு இருந்தால் மாத்திரமே வழக்கு தொடுக்கலாம் மேலும் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பை எந்த வழக்கும், பணமும் மீளக் கொடுக்க முடியாது. எனவே, தீமை க்கு எதிர்த்து நின்று மதியீனமான காரியங்களை நாங்கள் செய்யக் கூடாது. நீங்கள் ஒரு வகுப்பின் ஆசிரியராக இருந்தால், மாணவர்கள் யாவரும் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது பொதுவான சட் டம். ஆனால் ஒரு மாணவன் அதை மீறி முரட்டுத்தனமான காரியங்களை செய்ய முடியும். ஒரு காரியாலயத்தில் நீங்கள் மேற்பார்வையாளராக இருந்தால், உங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒரு சிலர் காரியாலயத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படியாதிருப்பதைக் காண லாம். அவர்கள் தங்கள் வேலை பறிபோவதைக் குறித்தும் பொரு ட்படுத்துவதில்லை. இதே போல, எங்களில் யாவரும் தேவனு டைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றவர்கள் அல்லர். நாங் கள் கூடி வரும் இடங்களிலும் (குடும்பம், பாடசாலை, சபை, வெளி இடங்கள்) இத்தகைய மனிதர்கள் இருக்கலாம். எனவே, இத்தகைய மனிதர்களோடு முரண்டு பிடிக்காதிருங்கள், சட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் ஒரு பொருட்டாக எண்ணாத மனிதர்களோடு விவாதத் திற்கு செல்லாதிருங்கள். எல்லா சூழ்நிலைகளிலும், மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் கனிகளை நிதானித்தறிந்து நலமானதைப் பற் றிக் கொள்ளுங்கள். உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிக ளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமா வது சாயாதே. உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

ஜெபம்:

நீதியின் தேவனே, நீதியைவிட்டு விலகி, தங்கள் வாழ்க்கையை அநீதிக்கு ஒப்புக் கொடுத்திருக்கின்றவர்களுடன் தர்க்கிக்காமல், அவர்களை விட்டு விலகும்படி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 4:27