புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2019)

கிருபையின் காலம்

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.


தன் மகனின் கையில் ஏற்பட்ட சிறிய வெட்டுக் காயம், உயிர் ஆபத்திற்கு ஏதுவல்லாதது என்பதை அறிந்த போதும் அவன் தாயார் கலக்கம் அடைந்தாள். வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரி வில், அநேகர் இருந்தபோதும், அவளுடைய எண்ணமெல்லாம், என் மகனுக்கு காலதாமதமின்றி சிகிச்சை நடைபெறவேண்டும் என்பதாக இருந்தது. அவளுடைய பதற்றம் அந்த சிகிச்சை நிலையத்திலுள்ள யாவருக் கும் தெளிவாக தெரிந்தது. அவள் சிகிச்சையை முடித்து அறையிலிருந்து வெளியே வரும் போது, கடும் ஆஸ் துமா வியாதியினால் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறு பைய னின் தாயாரின் கண்ணீரைக் கண் டாள். இப்போது இவள் பதற்றம் எல்லாம் அகன்று, மற்றய பையன், உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றானே, ஆனால் நான் இந்த சின்ன வி~யத்திற்காக மிகவும் சுயநலமாக இருந்தேன் என்று மனவ ருத்தம் அடைந்தாள். சில வேளைகளிலே மனிதர்கள், ஆரோக்கியத் தைப் பற்றி பேசும் போது, தங்களுக்கு நோய் இருக்கின்றது என கூறிக் கொள்வார்கள். அப்படி கூறுபவர்களில் பலர், கடும் நோயின் தாக்கத்தை அறியாமலும், தங்கள் உயிருக்காக போராடிக் கொண்டிரு க்கும் பல நோயாளர்களின் வேதனையையும் அறியாதிருக்கின்றார் கள். எங்கள் நாட்டில் குழப்ப ங்கள் இருக்கின்றது என்று கூறும் சிலர்;, உண்மையான யுத்தம் என்றால் என்ன? அகதியாய் இருப்பது என்றால் என்ன? யுத்தத்தின் பாதிப்பென்றால் என்ன? என்று அறி யாமலிருக்கின்றார்கள். இதே போல எங்களுக்கு க~;டம் என்று கூறும் சிலர், உண்மையான வறுமை என்றால் என்ன என்பதை உணராமல் இருக்கின்றார்கள். பிரியமானவர்களே, எந்த கடினமான சூழ்நிலையும் கிறிஸ்துவைச் சார்ந்து வாழ்பவர்களை மேற்கொள்ள முடியாது என்று வேதத்தில் காணும் பாத்திரங்கள் வழியாக அறிகின்றோம். இன்று பல நாடுகளிலே கர்த்தரின் பணிக்காக திறந்த வாசல் உண்டு. அந்த நாடு களிலே ஏற்படும் சில எதிர்ப்புக்களையும், ஏளனங்களையும் கண்டு, சோர்ந்து போய், தேவ பணி செய்வத ற்கு இன்று சூழ்நிலைகள் கடி னமாக இருக்கின்றது என நாங்கள் கூறுவோமாக இருந்தால், இரு ளின் நாட்கள் வரும் போது என்ன கூறுவோம்? எனவே இக் கிருபையின் நாட் களை ஆதாயப்படுத்திக் கொள்வோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, சவால்களை கண்டு பயந்து, கிருபையின் நாட்களை விரையப்படுத்தாதபடி, நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளத்தக்கதாக என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியார் 5:11