புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2019)

சேனைகளின் கர்த்தர் நம் தேவன்

கொலோசெயர் 2:10

மேலும் சகல துரைத்த னங்களுக்கும் அதிகாரத் துக்கும் தலைவராயிருக் கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.


தண்டில் சேவகம்பண்ணுகிற எந்தப் போர்வீரனும், சேவகம் எழுதிக் கொண்ட தேசத்தின் கொடியின் கீழே கிரியை நடப்பிப்பான். அவனு க்கென்று ஒரு கீதம் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பட்டாளம் இருக்கும். அவனுக்கு என்று ஒரு சீருடை இருக்கும். அவனுக்கென்று சில பயிற்சிகளும் ஒழுக்க நெறிகளும் உண்டு. அவனுக்கென்று சில ஆயுதங்கள் உண்டு. அந்த போர்வீரர்க ளுக்கென்று ஒரு தலைவன் இருப் பான். சில வேளைகளிலே அவர்கள் தங்கள் தேசத்திற்காக உயிரை பண யம் வைத்து போராடுவார்கள். நாங் கள் யாவரும் சேனைகளின் கர்த்தரா கிய கிறிஸ்துவின் கொடியின் கீழே சேவகம் எழுதப்பட்டிருக்கின்றோம். எமது தலைவன் மனிதர்களுடைய முறைமையின்படியல்ல, தேவனுடைய முறைமையின்படி ஏற்படுத்தப்பட்டவர். மனித முறைமையின்படி, போர்வீரர் கள் தங்கள் தலைவனுடைய உயிரைக் காக்க, தங்கள் உயிரைத் தியாகம் செய்து போராட பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆனால் இவரோ, தலைவர்களுக்கும் தலைவனாக இருந்தும், தம்முடைய சேனையின் வீரர்களை மீட்கும்படிக்கு, தன் உயிரையே பலியாகக் கொடுத்தார். இவர் பயிற்றுவிக்கப்பட்டவர் அல்ல. இவர் சர்வ வல்லவர் ஆனால் தம் சேனை வீரர்களின் மேல் வைத்த அன்பின் நிமித்தம் பூமியின் தாழ்விடங்களுக்கு இறங்கி வந்தார். இரட்சிப்பென்னும் வஸ்திரத்தை எங்களுக்குத் தந்தார். தம்முடைய சர்வாயுதவர்க்கத்தை எங்களுக்குத் தந்தார். அவரே எங்கள் கீதம். அவரே எங்கள் சேனைகளின் தலைவன். சகல அதிகாரங்களும் அவருக்கு கீழ்ப்பட்டிருக்கின்றது. மனிதகுலம் மீட்படைவதற்கு இயேசுவின் நாமம் அல்லாமல் வேறொரு நாமும் இல்லை. அவருக்குள் நாங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிரு க்கின்றோம். இந்த உலகிலே சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் அல்லது பாதகமாக இருந்தாலும், உயர்வானாலும் தாழ்வானாலும், அவருக்குள் நாங்கள் திருப்தியடைகின்றோம். கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். சத்துருவானவன், தம் முடையவர்களுக்கு எதிராக வரும் போது, அவர்; வெற்றிக்கொடி ஏற் றுவார்.

ஜெபம்:

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஜீவ சேனையின் போர்வீரர்களாகிய நாம் பாக்கியம் பெற்றவர்கள். அந்த உண்மையை உணர்ந்து கொள்ளும்படியான மனக்கண்களைத் தாரும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத்திராகமம் 15:3