புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2019)

வாழ்வு தரும் தெய்வம்...

நீதிமொழிகள் 14:12

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.


தன் நிலையை அறியாத மனிதன் பரிதவிக்கப்படத்தக்கவன். அதா வது, பாவம் ஒரு மனிதனில் குடி கொண்டிருக்க, அவன் அந்த பாவ த்தை உணராது, தன்னை பரிசுத்தன் என்று சொல்லிக் கொள் வான், அவன் தன் வாழ்க்கையை மாற்றி அமைக்காவிட்டால் அவனுக்கு மனந் திரும்ப வேண்டும் என்ற உணர்வு ஏற்படப் போவதில்லை. இத னால் மனிதர்கள் தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொள்கின் றார்கள். மீட்பராகிய இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே இரு ந்த யூத மதத் தலைவர்கள் கூட மீட்ப ரின் வரவிற்காக காத்திருந்தார்கள். வேத த்தை முறைப்படி கற்று, வேத வாக்கி யங்களை அறிந்திருந்தும், தங்கள் நிலையை உணராமல், தங்கள் இருத யத்தை கடினப்படுத்தியதால், மீட்பரா கிய இயேசு வந்த போது, அவரை அறிய முடியாமல் போய்விட்டார் கள். சில வேளைகளிலே, மனிதர் கொள்கைவாதிகளாக மாறிவிடுவ தால் உண்மையை அறிந்தாலும், உண்மையை விட தங்கள் கொள் கைகளே மேலானது என தங்கள் இருதயத்திலே நிச்சயித்திருப்பதால் தங்கள் மனக் கண்களை குருடுபடுத்தி விடுகின்றார்கள். அதாவது, நான் சொல்வதும் செய்வதும் தேவனுடைய பார்வையில் சரியாக இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து அறிய இடங் கொடுப்பதில்லை. யாரும் அதை சுட்டிக் காட்டினாலும், அதை ஏற்றுக் கொள்வதில்லை. “இது எங்கள் கொள்கை, இப்படித்தான் காரியங்களை செய்து வந்தோம், இனியும் இப்படித்தான் செய்து கொள்வோம்” என்று தங் கள் நிலையை மாற்றிக் கொள்ள மறுக்கின்றார்கள். மீட்பரை எதிர்பார்;; த்திருந்தவர்களுக்கு மீட்பரை அறியமுடியவில்லை. அவர்கள் மீட்பரா கிய இயேசுவை சிலுவையில் அறையும்படி வேண்டிக் கொண்டார்கள். அவரை சிலுவையில் அறைய பணிப்புரைபெற்ற ரோம வீரர்களின் தலைவன், இயேசுவை சில மணித்தியாலங்கள் மாத்திரமே கண்டான். ஆனால், அந்நியனாகிய அவன், குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள் நடந்த சம்பவங்களை கண்டு மெய்யாகவே இயேசு நீதிபரராயிருந் தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். பிரியமானவர் களே, நாங்கள் எங்கள் வழிகளில் நடந்தால், கொள்கைவாதிகளாகிவி டுவோம். எனவே எப்போதும், தேவனுடைய வழிகளில் நடக்கத்தக்க தாக அவருடைய வார்த்தைகளை இருதயத்தில் பதித்து வைப்போம்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் இருதயத்திலுள்ளதை நான் அறிந்து, உமக்கு வேதனை உண்டாக்கும் வழிகளிலிருந்து விலகி நடக்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 8:2