புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2019)

தருணம் இதுவே

நீதிமொழிகள் 3:27

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே


சில மனிதர்கள், பிறருக்கு உதவி செய்யும்படி, தங்கள் வாழ்க்கையில் சரியான தருணம் (Pநசகநஉவ வiஅiபெ) வர வேண்டும் என்ற மனநிலையு டையவர்களாக இருக்கின்றார்கள். அதாவது எனக்கு நேரம் இருக்க வேண்டும். நான் மற்ற அலுவல்களில் ஈடுபடாமல் இருக்கும் நேரமாக இருக்க வேண்டும். நான் உதவி செய்யும் மனிதன், இன்ன பிரகார மான வாழ்க்கை வாழ்திருக்க வேண்டும். அவன் இவ்வண்ணமாக அடிபட்டு குற்றுயிராக இருக்க வேண் டும். எனக்கு சகலமும் சம்பூரணமாக இருக்கும் வேளையாக இருக்க வேண் டும். அப்படியிருக்கும் போதுதான் நான் அயலவனுக்கு உதவி செய்வேன் என்று சிந்திக்கும் மனிதர்களின் மன நிலை தவறானது. அதாவது, மற்ற வர்களுக்கு உதவி செய்யும் எண்ணம், எங்கள் பொருளாதர நிலையை பற்றி யதல்ல, எங்கள் மனநிலையை பற்றி யது. இருள் சூழ்ந்திருக்கும் இந்த உலகிலே, எங்கள் அயலவர்கள் பலர், பாவ இருளிலே அகப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் பலர், தாங்கள் பாவ கட்டுக்களிலே இருக்கும் நிலையைக் கூட உணரமு டியமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெளியரங்கமாக, குடி, மதுபோதை, போதைவஸ்து போன்ற பல கட்டுகளில் விடுதலைய டைய முடியாமல் வாழ்கின்றார்கள். இருதயத்தில் குடி கொண்டிருக் கும், வன்மம், பகை, கசப்பு மற்றும் மோக பாவ கட்டுகளில் அக ப்பட்டிருப்போரும் பலர். பிரியமானவர்களே, சற்று, தரித்திருந்து, உங் களை சுற்றியுள்ளவர்களின் நிலையை கிருபையின் கண்கள் வழியா கப் பாருங்கள். எத்தனையோ ஆத்துமாக்கள், பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே எங்கள் தேவனாகிய கர்த்தரு டைய அநாதித் தீர்மானம். நாங்கள் அறிந்த யாவருக்கும் எங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், ஒரு சிலருக்காவது நாங்கள் உதவி செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உண்டு. அவைகளை சிந்தித்துப் பாருங்கள். பெரிய காரியங்கள் அல்ல, சிறிதாக ஆரம்பியுங்கள். சிறிய விதை வளர்ந்து பெரிய விருட்சமாக மாறுவது போல, நீங்கள் ஒருவருக்கு செய்யும் சிறிய உதவி, ஆண்டுகள் கடந்து செல்லும் போது அதிக பலனைக் கொடுக்கும்.

ஜெபம்:

கருணை நிறைந்த தேவனே, காலத்தை வீணாக்காமல், ஆதாயப்படுத்திக் கொள்ளத்தக்கதாக, நன்மை செய்யும் மனநிலையை எனக்கு தந்து உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:2