புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2019)

எனக்கு பிறன் யார்?

லூக்கா 10:29

எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.


யூத மதத் தலைவர்களில் ஒருவனாகிய நியாயசாஸ்திரி “எனக்குப் பிறன் யார்” என்று இயேசுவிடம் கேட்டான். அந்த வேளையிலே, இன்று நாங்கள் “நல்ல சமாரியன்” என்று அழைக்கும் உவமையை இயேசு கூறினார். ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ் திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற் செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழி யே வந்து, அவனைக்கண்டு, பக்க மாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான். அந்த ஆசாரியனும் லேவியனும் விலகிப்போனதற் குரிய தங்கள் நியாயங்களை கூறிக் கொள்வார்கள். அந்த வழியிலே வந்த சமாரியன், குற்றுயிராக இருக்கும் மனுஷனைக் கண்டதும் மன துருகினான். அந்த மனிதன், எவ்விடத்தான்? ஏன் எரிக்கோவிற்கு போக பிரயாணப்பட்டான்? அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தான்? யார் அவனை அடித்தார்கள்? எதற்காக அடித்தார்கள்? இதனால் நான் பிரச்சனைக்குள்; மாட்டிவிடுவேனோ? இவையொன்றையும் குறித்து அவன் சிந்திக்கவில்லை, மாறாக அந்த மனிதனுடைய நிலையை கண் டவுடனே மனதுருகினான். சமாரியனுடைய சமுதாய அந்தஸ்தோ அல் லது அவன் சென்று கொண்டிருந்த பிரயாணத்தின் நோக்கமோ, கள்வ ர்களால் தனக்கும் ந~;டம் வரலாம் என்ற பயமோ எந்த சூழ்நி லையாலும் அந்த சமாரியனை தடுக்க முடியவில்லை. பிரியமானவர் களே, இன்று நாங்கள் எங்கள் அயலவர்களை பலவிதமான இக்கட் டுகளில் காணும் போது எங்கள் மனதில் தோன்றும் சிந்தை என்ன? இந்த உலகத்தைவிட்டு முற்றும் பிரிந்திருக்கும்படி நாங்கள் அழைக் கப்படவில்லை. இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி, பூமிக்கு உப்பாக இருக்கும்படி அழைக்கப்பட்டோம். குற்றுயிராய் கிடந்த மனிதனுக்கு உதவுவதற்கு, அந்த சமாரியன், தன் சட்ட ப்புத்தகத்தை தட்டிப் பார்க்கவில்லை. அதே போல தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்ட நாங்களும், பிறருடைய இக்கட்டான சூழ்நிலையில் நீதி நியாயங்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் குறித்து விமர்சிக்காமல் உதவி செய்வோமாக.

ஜெபம்:

மனதுருகும் தேவனே, உம்முடைய கிருபையின்படி எனக்கு மனதுருகுகின்றீர். அதே போல நானும் மற்றவர்களின் இடுக்கண் நேரங்களிலே அவர்களுக்கு இரக்கங்காட்ட உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:21