புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2019)

சுவிசேஷத்தை அறிவியுங்கள்

ரோமர் 10:15

சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.


சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சமாதானத்தின் சுவிசே~ த்தை நாங்கள் மற்றவர்களுக்கு வார்த்தையினாலும் கிரியைகளி னாலும் அறிவிக்க வேண்டும். “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொ ள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” என பரிசுத்த வேதாகமம் கூறு கின்றது. ஒருவன் இயேசுவை விசுவாசிக்காவிட்டால் எப்படி அவரைத் தொழுது கொள்ளுவான்? இயேசு யார் என்று அறியாதவன், எப்படி விசுவாசிக்க முடியும்? இயேசு யார் என்பதை அறிவிக்கின்றவன் (பிரசங்கி க்கிறவன்) இல்லாவிட்டால், எப்படி மற் றவர்கள் இயேசுவைப்பற்றி கேள்விப்ப டுவார்கள்? பிரசங்கிக்கின்றவர்கள் நற் செய்தியை கூறும்படி அனுப்பப்படா விட்டால் எப்படி அவர்கள் பிரசங்கி ப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற் காரியங்களைச் சுவிசே~மாய் அறிவி க்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வ ளவு அழகானவைகள் என்று பரிசுத்த வேதத்திலே எழுதியிருக்கிறதே. விசுவா சம் தேவனுடைய வார்த்தைகளை கேட்பதனால் உண்டாகின்றது, ஆனாலும் சுவிசே~த்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை என்று வேதம் கூறுகின்ற பிரகாரம் சிலர் நீங்கள் கூறும் இயேசு கிறிஸ்து வின் மீட்பின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ள மறுப்பதால், நீங்கள் சோர்வடைந்து போய்விடாதிருங்கள். நீங்கள் நற்செய்தியை அறிவிக் கும்படி பிரத்தியேகமாக பிரித்தெடுக்கப்படாவிட்டாலும் (மி~னரி ஊழி யம்), உங்கள் நாளாந்த வாழ்க்கை வழியாக நீங்கள் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும். “என்னை காணுவோர் உம்மை காணட்டும்” என்று அழகான பாடல்களை பாடுகின்றோம். மற்றவர்கள் இயேசுவை எங்களில் காணும்படியாய் எங்கள் வாழ்க்கை முறை நற்செய்தியாக மாற வேண்டும். தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், தியானப் புத்தகங்களை மற்றவர்களு டன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை வல்லமையு ள்ளது. அவருடைய வார்த்தை ஜீவனுள்ளது. அந்த வார்த்தைகள் மனி தர்களை விடுதலையாக்கும். அதை உங்கள் இருதயத்தில் விசுவாசி த்து, மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.

ஜெபம்:

என்னை தெரிந்து கொண்ட தேவனே, வார்த்தைகள் வழியாகவும், கிரியைகள் வழியாகவும், உம்முடைய நற்செய்தியை மற்றவர்களுக்கு கூறும்படி என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோத்தேயு 4:2