புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2019)

இருதயத்தில் விசுவாசி

ரோமர் 10:9

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருத யத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.


கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். தேவன் ஒருவர் இருக்கின்றார் என்று கூறிவிட்டு, தன்பாட்டிற்கு வாழ்பவன்; அல்ல, அவரை விசுவாசித்து அவரை நோக்கி கூப்பிடுகின்றவனே இரட்சிக்கப்படுவான். இங்கே கூறப்படும் விசுவாசம் என்ன? தேவன் ஒருவர் உண்டென்று பிசாசுகளும் விசு வாசித்து, நடுங்குகின்றன. என் னவெ ன்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். கர்த்தராகிய இயேசுதாமே, தேவனு டைய ரூபமாக இருந்தும், தம்மை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெ டுத்து, மனு~ர் சாயலானார். பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார், எங்கள் பாவ ங்களுக்காக பாடுகள் பட்டு, தம் தூய இரத்தத்தை சிந்தி, சிலுவையிலே மரி த்து, மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார், பரலோகத்திற்கு எழுந்தருளி பிதாவின் வலது பாரிசத்திலே வீற்றி ருக்கின்றார். அவர் தம்முடையவர்களை சேர்த்துக் கொள்ள மறுபடி யும் வருவார என்றும், யாவருக்கும் நீதியான நியாயத்தீர்ப்பை வழ ங்குவார் என்றும் உன் “இருதயத்திலே” விசுவாசி. அந்த விசுவாசத்தை உன் வாயினாலே அறிக்கையிடு. அவரை விசுவாசித்தால், அவரு டைய வார்த்தைகளின்படி, உன் வாழ்க்கையில் கிரியைகளை நடப்பி. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை. அதாவது, நீ எந்த நாட்டவனாக இருந்தால் என்ன, எந்த குலத்தவனாக இருந்தால் என்ன, அவைகளை விட்டுவிட்டு உன் கர்த்தராகிய இயேசுவை தொழு துகொள், கர்த்தரானவர், தம்மைத் தொழுது கொள்ளுகிற யாவருக் கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.

ஜெபம்:

இரட்சிப்பின் தேவனே, எதிரிடையான சூழ்நிலைகளிலும் உம்மை கர்த்தரென்று அறிக்கை செய்து, விசுவாசமுள்ள இருதயத்தோடு நான் வாழும்படிக்கு எனக்கு அருள்புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 52:7