புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 04, 2019)

பிரகாமுள்ள மனக்கண்கள்

எபிரெயர் 11:25

அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,


தேவனுடைய ஜனங்கள், எகிப்து தேசத்திலே அடிமைகளாக இருந்த நாட்களிலே, எபிரெயருக்கு (இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்ட தேவனுடைய ஜனங்கள்) பிறக்கும் ஆண் குழந்தைகளை கொன்று போடும்படி, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் கட்டளை பிறப்பித் திருந்தான். அந்நாட்களிலே மோசே பிறந்த போது, அவன் நதியோ ரமாக நாணலினால் செய்யப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த போது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளை யாக வளர்த்தாள். மோசே எகிப்தியரு டைய சகல சாஸ்திரங்களிலும் கற்பி க்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். ஆனால் அவனு டைய ஜனங்களோ, ஆளோட்டிகளால் கடும் வேலைகள் செய்யும்படி திணி க்கப்பட்டு, துன் புறுத்தப்பட்டு வந்தார் கள். மோசே நாற்பது வயதான போது, இஸ்ரவேல் புத்திரராகிய தன் னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இரு தயத்தில் எண்ணமுண்டாயிற்று. அவனுடைய விசுவாச கண்கள் திறக் கப்பட்டதினாலே, தேவன் தம்முடைய ஜனங்களுக்கு கொடுப்பேன் என்ற, இனிவரும் பலனின் மேன்மையை உணர்ந்து கொண்டான். அடிமைத்தனத்திலிருக்கும் தன்னுடைய சகோதரர்கள், வல்லமைமிக்க பார்வோனிடமிருந்து விடுதலையடைக்கூடிய சாத்தியம் ஏதும் இல்லா திருந்த சூழ்நிலையின் மத்தியிலும், அரண்மனை வாழ்வில் இருக்கும் பொக்கி~ங்களிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். இந்த உலகின் அநித்தியமான பாவ சந்தோ~ங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்க ளோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டான். எங்கள் வாழ்விலும் தேவன் எங்களுக்கு மேன்மையான பலனை பரலோகில் வைத்திருக்கின்றார். எனவே நாங்கள் தேவனுடைய பிள்ளைகளோடு சேர்ந்து பாடுகளையும் துன்பங்களையும் சகிக்க நேர்ந்தாலும், இந்த உலகம் தரும் சுகபோகங்களில் இழுப்புண்டு பாவம் செய்யக் கூடாது. தேவனுடைய தாசனாகிய மோசேயை போல, எங்கள் விசுவாசக் கண்கள், பிரகாசமடையும்படிக்கு தேவனை வேண்டுவோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகிலே நாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் எதுவாக இருந்தாலும், உமக்குள் மகிழ்ச்சியாக இருக்கும்படி என் ஆத்துமாவை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:17-18