புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2019)

கர்த்தர் நல்லவர்

சங்கீதம் 119:68

தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்


நீங்கள் ஒரு மனிதனுக்கு மனங்கோணாமல் எப்போதும் நன்மை செய்து கொண்டிருக்க, அந்த மனிதன் உங்களைக் காணும் போதெல்லாம், தன் குறைகளையே கூறிக்கொண்டிருந்தால், அந்த மனிதனைக் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள். இப்படிப்பட்ட மனநிலையுள்ள மனிதர்கள் ஒரு போதும் மனநிறைவு அடைவதில்லை. சமாதானமான வாழ்வு எப்போதும் அவர் களுக்கு தூரமாகவே இருக்கும். எங் கள் தேவன் எப்போதும் நன்மை செய் கின்றவர். அவரிடத்தில் தீமை இல்லை. துன்மார்க்கமான வழியில் நடக்கும் மனி தர்கள் கூட அழிந்து போவதை அவர் விரும்புவதில்லை. நாங்கள் ஆராதிக் கும் தேவன் எப்படிப்பட்டவர் என்ற அறி வில் நாங்கள் வளர வேண்டும். அந்த வளர்ச்சியில் பெருகும்படிக்கு, அவரை துதிக்கும் துதி எப்போதும் எங்கள் வாயிலிருக்க வேண்டும். இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி மனம் சோர்ந்து போகா மல், தேவனாகிய கர்த்தர் இன்றுவரை நமக்குச் செய்த நன்மைகளை நினைத்து, அதை அறிக்கையிட்டு, மனப்பூர்வமான நன்றிப்பலிகளை எங்கள் உள்ளத்திலிருந்து எழும்ப வேண்டும். அந்த நன்றி எங்கள் இருதயத்தில் பெருகும் போது, எங்கள் தேவன் யார் என்பதைக் குறித்த அறிவு எங்களுக்குள் பெருகும். தேவன் உங்கள் தேவை களை சந்திக்கும் போது, அந்த ஆசீர்வாதத்தை கொண்டாடி துதி பலிகளை செலுத்துங்கள். உங்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு ஒத்த பிரச்சனைகளோடு இருக்கும் மற்ற மனிதர்களை தேற்றுங்கள். உங்கள் சாட்சியை பகர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள். ஏழைகளுக்கு தானதர்மங்களை வழங்குங்கள். இவை எல் லாவற்றினாலும் தேவனாகிய கர்த்தருக்கு நன்றியைச் செலுத்துங்கள். “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதினால் உமது பிரமா ணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.” என்று சங்கீத புத்தகத்திலே வாசிக்கின்றோம். எனவே இன்றிலிருந்து, நெருக்கங்கள் அதிகரிக்கி ன்ற வேளையில், தேவன் செய்த உபகாரங்களை நினைத்து அவ ருக்கு நன்றி கூறுங்கள். நெருக்கத்தின் மத்தியிலும் அவர் எங்கள் புகலிடமாயிருக்கின்றார் என்பதை நாங்கள் உணரும்படிக்கு அவர் எங்கள் மனக்கண்களை பிரகாசமடையச் செய்வாராக.

ஜெபம்:

எப்போதும் நன்மை செய்கின்ற தேவனே, சூழ்நிலைகள் வழியாக நீர் எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்து கொள்ளத்தக்கதாக நன்றி சொல்லும் இருதயத்தை எனக்கும் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:1