புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2019)

கர்த்தர் எங்கள் சார்பில்

மத்தேயு 10:31

ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.


இயேசு என்னும் நாமத்தை குறித்து நல்ல அறிக்கை செய்யும்படி அழைக்கப்பட்ட தேவபிள்ளைகள், இன்று, குடும்பம், நண்பர்கள், அயல வர்கள், அதிகாரிகள், மற்றும் சக உறுப்பினர்களால் வரும் அழுத்தங்க ளினால் பயந்து வாழ்கின்றார்கள். ஏனெனில், மற்றவர்களால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ அல்லது எங்கள் பிள்ளைகளின் எதி ர்கால வாழ்க்கை எப்படியாகுமோ என்ற பயம் அவர்களை ஆட்கொ ண்டு விடுகின்றது. இயேசுவை பற்றி நல்ல அறிக்கை செய்து வாழ்வதால், பல உபத்திரவங்களுக்கு முகங்கொடு க்க நேரிடலாம் என்றும், சில வேளை களிலே உயிர் ஆபத்து வரலாம் என்ற பயமும் ஏற்பட்டுவிடுகின்றது இவைக ளால் பல மனிதர்கள் தினமும் அழுத்த ப்படுகின்றார்கள். இயேசு சொன்னார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமி ல்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப் படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங் கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மனுஷர் முன்பாக என்னை அறி க்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிரு க்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன். மனுஷர் முன் பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோக த்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்க ளுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” பிதாவாகிய தேவன், நல்லோர் மேலும் தீயோர் மேலும் சூரியனை உதிக்கப்ப ண்ணி, மழையைப் பொழிகின்றார். அதாவது, தம்மை எதிர்க்கின்ற மனிதர்களில் கூட அவர் நீடிய பொறுமையாய் இருந்து, அவர்கள் மனந்திரும்பும்படி, நன்மை செய்கின்றார். அப்படியானால் தாம் தெரி ந்து கொண்ட பிள்ளைகளின் விடயத்தில் இன்னும் அதிக கரிசனையுள்ளவராக இருப்பார் அல்லவா. ஆதலால், பிரியமானவர்களே, பயப்படாதிருங்கள்! கர்த்தர் எங்கள் சார்பில் இருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் எங்கள் சார்பில் இருக்கின்றீர் என்ப தின் மேன்மையை நான் உணர்ந்து கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:1-6