புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2019)

கட்டுக்கள் அறுக்கப்படும்

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுத ங்கள் மாம்சத்துக்கேற்ற வைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிற தற்கு தேவபலமுள்ள வைகளாயிருக்கிறது.


அடிமைத்தன கட்டுக்கள் பெருகிக்கொண்டு போகும் நாட்கள் இவை. புகைபிடித்தல், மதுபோதை, பாலியல் சீர்கேடுகள், ஆபாசப் படங்கள், போதைவஸ்து போன்றவை அடிமைத் தனத்திற்கு பொதுவான உதார ணங்களாக இருக்கின்றது. இவைகளைவிட மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்வில் கண்டு கொள்ளாத அல்லது உணர்ந்து கொள்ள முடியாமல் இருக்கும் பல அடிமைத் தனங்களும் உண்டு. சிலர் பொரு ளாசை, பெருமை, கீழ்ப்படியாமை, கோபம், வன்மம், பகை போன்ற பல மாம்சத்தின் கிரியைகளுக்கு தங்களை அடிமைப்படுத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலர், திரைப்படங்கள், நாடகங் கள், கற்பனா இன்பம் (கற்பனை உல கில் வாழ்தல்), மற்றவர்களை குறித்து எப்போதும் நகைத்தல், கோள் சொல்லித்திரிதல், ஆகாத சம்பா~ ணைகள், தூ~ணமான வார்த்தைகளை பேசுதல் போன்ற பல கட்டு களில் அறியாமலே வாழ்ந்து வருகின்றார்கள். அதாவது இவைகள் இவர்களின் நாளாந்த வாழ்வின் பெரும் பகுதியாக மாறிவிடுகின்றது. இவைகளை நிறைவேற்றுவதற்காக கடும் முயற்சிகளை எடுப்பார்கள். இவைகளினாலே புறம்பான மாம்சமான மனிதன் போ~pக்கப்படு வதால், படிப்படியாக தங்கள் ஆத்துமாவுக்கு ந~;டம் விளைவித்துக் கொள்கின்றார்கள். எனவே, இப்படியான அடிமைத்தன வாழ்க்கையில் தங்கள் நாட்களை வீணடிக்கின்றவர்களுக்காக நாங்கள் அனுதினமும் போராடி ஜெபிக்க வேண்டும். ஜெபத்தினால் கட்டுகள் அறுக்கப்ப டும். கர்த்தருடைய வேளையை நாங்கள் அறியோம், ஆனால் அவ ருடைய சித்தம், நாங்கள் சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் என்பதாகும். நாங்கள் மாம்ச சரீரம் உடையவர்களாயிருந்தாலும், இந்த மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங் கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிற தற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர் க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறி ஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். ஜெபமானது தேவன் எங்களுக்குத் தந்த பெரிதான ஆயுதம்.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, வாழ்க்கையை பாழாக்கும் அந்தகார கட்டுக்களில் அகப்பட்டிருப்போரை விடுதலை செய்யும்படிக்கு ஊக்கமாக ஜெபிக்கும் உள்ளத்தை எனக்கும் தந்தருள்வீராக.இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:17

Category Tags: