புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2019)

எல்லாம் என் இயேசு

யோபு 5:18

அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.


நீங்கள் ஆடுகளை மேய்க்கும் நல்ல ஒரு மேய்ப்பனாக இருக்கி ன்றீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் மந்தையில் இருக்கும் ஒரு ஆடு எப்போதும் விளையாட்டு தனமுடையதாகவும், உங்கள் சத்தத்தைக் கேளாமல், மற்றய மந்தைகளை விட்டு துள்ளித் துள்ளி அங்குமிங்குமாக ஓடுகின்றதாயுமிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஓநாய் வந்து அந்த ஆட்டை பிடிக்கு முன்பு, நீங்கள் அதை எப்படியாவது சீர்ப்படுத்துவீர்கள் அல்லவா! சில வேளைகளிலே ஆடுகளை மேய்ப்ப வர்கள் சில ஆடுகள் துரிதமாக ஓடி, விலகிப்போகாதபடிக்கு, விசே~மாக அதன் மேல் அதிக நோக்கமாயிருப் பார்கள். தங்கள் பிள்ளைகளை நேசி க்கின்ற பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகளில் ஒருவன், எப்போதும் குறும்புத்தனமாக இருந்துவிடுவதற்கு அனுமதிப்பதில்லை. சில வேளைகளிலே (எல்லா வேளைகளிலும் அல்ல), அவர்களை கண்டித்து, தண்டித்து நடத்துவார்கள் அல்லவா! சத்திர சிகிச்சை செய்யும் வைத்தியர், சிகிச்சை செய்யும் இடத்தை திறக்கும்படிக்கு அந்த இடத்தை வெட்டுவாரல்லவா. அவருடைய நோக்கம், நோயாளியை குணப்படுத்த வேண்டும் என்பது அல்லவா! எங்களை வழிநடத்தும் இயேசு எங்கள் நல்ல மேய்ப்பராக இரு க்கின்றார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். அவர் அன்புள்ள தந்தையைப் போல தோளிலே சுமக்கின்றவர். சில வேளை களிலே, நல்ல தந்தையைப் போல கண்டித்து, தண்டித்து நடத்து கின்றார். கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல் லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். இயேசு எங்கள் பரம வை த்தியராக இருக்கின்றார். அவருடைய வார்த்தை எங்களை தேற்று கின்றது. அவர் தமது வசனத்தை அனுப்பி தம்முடையவர்களை குணமாக்குகின்றார். சில வேளைகளிலே, அவர் சத்திர சிகிச்சை செய்யும் வைத்தியர் போல எங்களை காயப் படுத்தி நோயை ஆற்றுகின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, உம்முடைய அன்பு பெரியது. நீர் நேசிக்கின்றவர்களுக்கு நீர் எல்லாமாக இருந்து, சீர்திருத்தி, ஸ்திரப்படுத்தி நடத்திச் சென்று முடிவிலே மகிமையில் சேர்ப்பதற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:6