புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 22, 2019)

தேவனோடு இடைப்படுங்கள்

சங்கீதம் 19:7

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;


ஞாயிறு தேவ செய்திகள் வழியாகவும், வேத பாடங்கள் வழியாகவும் அநேக அறிவுரைகளை கேட்கின்றோம். மேலும் இந்த அனுதின தியா னங்களிலும், வாழ்க்கையின் பலவிதமான காரியங்களைக் குறித்து தியானிக்கின்றோம். இவை யாவற்றையும் பார்க்கும் போது, ஒரு கிறிஸ்தவனாக வாழ்வதற்கு இவ்வளவு காரியங்களை செய்ய வேண் டுமா? இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்ற நினைவுகள் மனதில் தோன்றலாம். கடக்க வேண் டிய பள்ளத்தாக்குகளையும், ஏற வேண் டிய மலைகளையும் குறித்து சோர்வ டைந்து போகாமல். தேவன் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொடுத்திருக்கும் இலகுவான காரியங்களை செய்யுங் கள். அவையாவன: கருத்துடன் வேத த்தை வாசியுங்கள், தினமும் ஊக்கமாக ஜெபியுங்கள். எந்தச் சமய த்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியி னாலே ஜெபம்பண்ணுங்கள் (எபே 6:18). சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள். சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நீங்கள் விட்டுவிடாதிருங்கள் (எபிரெயர் 10:25). சத்திய ஆவி யானவர் வரும் போது சகல சத்தியத்திலும் உங்களை வழிநடத்து வார் (யோவான் 16:13) என்ற பிரகாரம், இவைகள் வழியாக தேவன் உங்கள் உள்ள த்தில் பேசி நீங்கள் செய்யவேண்டிய காரியங்களை உங்களுக்கு போதிப்பார். அப்பொழுது உங்கள் முன் நின்ற மலை கள், பள்ளத்தாக் குகள், ஆறுகள் மற்றும் அக்கினி போன்ற சவால் களை நீங்கள் இலகுவாக கடந்து வந்ததை குறித்து ஆச்சரியப்படு வீர்கள். இயேசுவானவர், எப்போதும் தனித்திருந்து பிதாவாகிய தேவ னோடு ஜெபத்தில் இடைப்படுகின்றவராக இருந்தார். அவர்தாமே, இந்த பூமியிலே செய்ய வேண்டிய காரியங்களையும், சொல்ல வேண்டிய காரியங்களையும் குறித்து வழிநடத்துதலை பெற்றுக் கொண் டார். தேவன் உங்களோடு இடைப்படும் இவைகளை (வேத வாசிப்பு, ஜெபம், சபை கூடிவருதலை) துண்டித்து விடாதிருங்கள். இவைகள் பாரமானவைகள் அல்லவே. இவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. இவைகளுக்கு மாற்றீடாக வேறெந்த காரியங்க ளையும் நீங்கள் செய்ய முடியாது. எனவே ஞான நன்மைகளை பெற்றுக் கொள்ளும்படி இவைகளை வாஞ்சையோடு கைகொள்ளு ங்கள்.அன்பின் தேவனே> உம்முடைய வழிநடத்துதலை நாம் பெற்றுக் கொள்ளும்படி நீர் ஏற்படுத்திய வழிமுறைகளை நான் வாஞ்சையுடன் கைக்கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய வழிநடத்துதலை நாம் பெற்றுக் கொள்ளும்படி நீர் ஏற்படுத்திய வழிமுறைகளை நான் வாஞ்சையுடன் கைக்கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:16-17