புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2019)

உதவி செய்யும் ஆவியானர்

ரோமர் 8:26

அந்தப்படியே ஆவியான வரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்.


இரு அணிகளுக்கிடையிலான கிரிகெற் விளையாட்டுப் போட்டியின் போது, ஒரு அணியினர், மற்ற அணியிலுள்ள ஒரு சில விளையாட்டு வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்வது (ழுரவ)எப்படி என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். மற்றய அணியினரின் சில வீரர்கள் துடுப்பெடுத்து ஆடும்போது (டீயவவiபெ), எப்படியான பந்துவீச்சுகளை அவர்களுக்கு வீச வேண்டும் (டீழறடiபெ) என்றும், அப்படி யான பந்துவீச்சுகளை வீசும்போது, துடுப்பெடுத்தாடுபவர்கள் என்ன செய் வார்கள் என்பதையும் தெளிவாக அறி ந்திருந்தார்கள். அதாவது, மற்ற அணி யின் சில வீரர்களின் பெலவீனங்களை குறிப்பாக அறிந்திருந்தார்கள். சில வேளைகளிலே, பரம அழைப்பின் பந்தையப் பொருளை நோக்கி யாத்திரை செய்து கொண்டிருக்கும் எங்கள் பெலவீனங்களும் வெளியரங்கமாகயிருக்கின்றது. “இந்த வாலி பனை கோபப்படுத்துவது சுலபம்” “இன்னுமொருவர் பாவம் செய்தால் இந்த சகோதரி குழம்பி விடுவார்” “அவருடைய பிள்ளையைப் பற்றி ஏதாவது சிறிதாக கூறினால் போதும் அந்தத் தாயார் குழம்பிடுவார்;” இப் படியாக மனிதர்களுடைய வாழ்க்கையில் பெலவீனங்கள் ஏற்படுவது ண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சில வேளைகளில் அறியாமல தவ றுகள் நடந்துவிடுவதுண்டு ஆனால், நான் எல்லாவற்றிலும் பூரணன் “ஆனால்” இந்தக் காரியத்தை மாத்திரம் எனக்கு சகிக்க முடியாது என சிலர் வெளியரங்கமாகவும் பெருமையாகவும் தங்கள் பெலவீனங் களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் செய்கைகளை குறித்து எந்த மனந்திரும்புதலும் இல்லாமல் இருப்பதனால், எதிரா ளியானவனுக்கு முகவர்களாக மாறிவிடுகின்றார்கள். “இவரை தொட் டால் போதும், சபையின் ஒருமைப்பாட்டை குழப்பிவிடுவார்” என்ற நிலைக்கு நாங்கள் போய்விடக்கூடாது. எனவே எங்கள் பெலவீனங்க ளைக் குறித்து நாங்கள் மேன்மை பாராட்டாமல், அவைகளை மேற் கொள்ள உதவி செய்யும் ஆவியானவருக்கு இடங் கொடுப்போம். நாங்கள் மனந்திரும்புதலுக்குரிய முதல் அடியை எடுத்து வைக்கும் போது, ஆவியானவர் தாமே எங்களுக்கு பெலன் தந்து நடத்துவார். கிறிஸ்தவ வாழ்க்கை தினமும் மறுரூபமாகும் வாழ்க்கை. தேவன் தரும்பெலத்தால் பெலவீனங்களை மேற்கொள்ளுவோம்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, என்னுடைய பெலவீனங்களைக் குறித்து அஜாக்கிரதையாக இருக்காமல், உம்மிலே பெலன் கொள்ளத்தக்கதாக என் மனக் கண்களை பிரகாசமடையச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:15

Category Tags: