புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 18, 2019)

பதறாத வாழ்வு

எபேசியர் 6:16

எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென் னும் கேடகத்தைப் பிடித் துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.


உலக பிரசித்தி பெற்ற கிரிக்கெற் விளையாட்டின் பயிற்சியாளர் ஒரு குறிப்பிட்ட அணியை உலக கிண்ணப் போட்டிக்கு ஆயத்தப்படுத்தி வந்தார். சிறப்பான விளையாட்டு வீரர்கள் அந்த அணியில் இருந்த போதும், எதிரிடையான சூழ்நிலைகள் ஏற்படும் போது, தங்கள் நிதா னத்தை இழந்து, பதற்றமடைந்து விடுவதனால், தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றார்கள் என தன் கரி சனையைத் தெரிவித்தார். பரலோக த்தை நோக்கி சென்று கொண்டிருக் கும் எங்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் அந்தகார வல்லமைகள் எங் களை நெருக்கும் போது, சில வேளை களிலே நாங்களும் பதற்றமடைந்து அல்லது சோர்வடைந்து தவறான முடி வுகளை எடுத்து விடுகின்றோம். அதையே எதிராளியாகிய பிசாசானவன் விரும்புகின்றான். எங்கள் பொறுமையை மாம்சத்தின் கிரியைகளால் காத்துக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன், நாங்கள் கோபமடையும்படியான வார்த்தைகளை பேசும் போது, அந்த கோப த்தை உள்ளடக்கி, எங்கள் இருதயத்தில் சேர்த்து வைப்பது நீடிய பொறுமை அல்ல. இருதயத்தில் சேர்த்து வைப்பது ஒரு நாள் மொத் தமாக வெளிப்படும். இப்படியான கோபத்தை அடக்கும் வழிமுறை கள் மாம்சத்திற்குரியது. எதிராளியானவன் எய்யும் அக்கினியாஸ்தி ரங்கள் போன்ற வார்த்தைகளை மேற்கொள்ளும்படியாய், விசுவாசம் என்னும் கேடகத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். கிரியை இல்லாத விசுவாசம் செத்தது. “உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” என்று இயேசு கூறினார். எனவே, மற்றவர்கள் எங்களை கோபப்படுத்தும் போது, எங்கள் விசுவாசத்தை, கிரியையில் காண்பிக்கும்படியாய், கர்த்தரு டைய வார்த்தையை விசுவாசித்து, எங்களை சபிக்கின்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். எங்களை நிந்திக்கின்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும். இப்படி கருத்துடன் நீங்கள் கர்த்தருடைய வார்த் தைக்கு கீழ்ப்படியும் போது, பிசாசானவனின் அக்கினியாஸ்திரங்களை நீங்கள் அவித்துப் போடுவீர்கள். இயேசுவில் நிலை கொண்ட விசு வாசி ஒரு நாளும் பதறமாட்டான்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, சோதனை நேரங்களிலே, நான் பதற்ற மடைந்து, பிழையான தீர்மானங்களை எடுக்காதபடிக்கு, உம்மிலே எப் போதும் நிலைத்தவனாக இருக்க என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:19